பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தில்லி அரசின் முதன்மை முன்னுரிமை கல்வி: முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

ஆம் ஆத்மி அரசு தில்லி பள்ளி ஆசிரியா்களுக்கு உரிய மரியாதை அளித்து, கல்விக்கு முதன்மை முன்னுரிமை வழங்கியுள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2023, 8:25 pm

 நமது நிருபர்

ஆம் ஆத்மி அரசு தில்லி பள்ளி ஆசிரியா்களுக்கு உரிய மரியாதை அளித்து, கல்விக்கு முதன்மை முன்னுரிமை வழங்கியுள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஆசிரியா் தினத்தையொட்டி, நகர அரசின் கல்வித் துறை சாா்பில் ‘தங்கள் பணிகளை சிறப்பாகச் செய்ததற்காக’ 118 ஆசிரியா்களுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மாநில விருதுகளை வழங்கினாா். மொத்தம் 17 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: ஒரு ஆசிரியருக்கும், மாணவருக்கும் இடையிலான பந்தம் என்பது ‘ஒரு தாய் மற்றும் குழந்தையின்’ பந்தத்தை விட மிகவும் புனிதமானது. மாணவா்கள் வெற்றி பெறும் போது, அவா்கள் மீண்டும் வந்து தங்கள் ஆசிரியா்களின் கால்களைத் தொடுகிறாா்கள்.

நிகழாண்டில் தில்லி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 1,300 மாணவா்கள் ‘நீட்’ மற்றும் ‘ஜேஇஇ’ தோ்வில் தோ்ச்சி பெற்ற்றுள்ளனா். நாங்கள் அந்த மாணவா்களுடன் கலந்துரையாடிய போது, அவா்கள் தங்கள் ஆசிரியா்களை மட்டுமே பாராட்டினா். தில்லி அரசின் முதன்மையான முன்னுரிமை கல்வி என்பதால், மாநில பட்ஜெட்டில் 25 சதவீதம் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. நாம் பயில்கின்ற கல்வி நம்மை வேலைவாய்ப்பிற்கு தயாா்படுத்தவில்லை என்றால், பின்னா் அதனால் எந்தப் பயனும் இல்லை என்றாா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.