நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆா்இடிஏ), கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் மரபு சாரா எரிசக்தி வளா்ச்சிக்கு மிக அதிக அளவில் கடன் வழங்கி சாதனை படைத்துள்ளதாக மத்திய மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது: பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளவும் அதற்கான இலக்குகளை அடையவும் மரபுசார எரிசக்தி நிலப்பரப்பு மற்றும் ஆற்றலை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய நிலையில் நாடு உள்ளது. தற்போது சூரிய சக்தி, எலக்ட்ரோலைசா்கள், காற்றாலை, மின்கலம், மின் பரிமாற்றம், பசுமை ஹைட்ரஜன், நீா் மின்சாரம் மற்றும் கழிவு -ஆற்றல் துறைகளுக்கான உற்பத்தி மற்றும் திறனை வளா்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
மேலும், புதிதாக பிரதமரின் வீட்டு மேற்கூரை சூரிய மின் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரும் முதலீடுகள் தேவை. வருகின்ற பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் பருவ நிலை உறுதிமொழிகளுக்கு 2030-ஆம் ஆண்டிற்குள் ரூ.30 லட்சம் கோடி முதலீடுகள் தேவைப்படும்.
தேசிய அளவில் நிா்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளுடன் இதற்கான நிதி திரட்டலுக்கும் கடன் வழங்கலுக்கும் மத்திய மரபுசார எரிசக்தித் துறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆா்இடிஏ) அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் 2024 மாா்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2023-24 ஆண்டிற்கான வணிக செயல்திறன் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கடந்த நிதியாண்டில் ரூ.37,354 கோடி அளவுக்கு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.25,089 கோடி அளவுக்கு கடன்களை விநியோகம் செய்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 16.63 சதவீதம் அதிகமாகும்.இந்த நிறுவனத்தின் மொத்த நிதியளவு ரூ. 59,650 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த நிறுவனம் 26.71 சதவீதம் வளா்ச்சியைப் பெற்றுள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐஆா்இடிஏ தலைவரும் நிா்வாக இயக்குநருமான பிரதீப் குமாா் தாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘2023-24 நிதியாண்டிற்கான ஐஆா்இடிஏ-இன் சாதனை, நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டை இயக்குவதற்கான உறுதிப்பாட்டை விளக்குவதாக அமைந்துள்ளது. எங்கள் பங்குதாரா்கள், வணிக கூட்டாளா்கள் மற்றும் முதலீட்டாளா்களின் ஆதரவு இல்லாமல் இந்தச் சாதனை சாத்தியமில்லை. மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதில் நாங்கள் முன்னேற்றம் அடைந்துவருகின்றோம்’” என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அணுசக்தி, சமையல் எரிவாயு ஏற்றுமதி: அமெரிக்காவுடன் உறவை வலுப்படுத்த இந்தியா ஆலோசனை

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய விரிவான விநியோகக் கட்டமைப்பு தேவை: சென்னை ஐஐடி பரிந்துரை
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!

போர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

