கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லி விமான நிலையத்தில் அணுகுண்டு மிரட்டல்: இரு பயணிகள் கைது!

பாதுகாப்பு சோதனையின் போது அணுகுண்டு வைத்திருந்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வி எழுப்பிய இரண்டு இளைஞர்கள்.

News image
- ANI
Updated On :8 ஏப்ரல் 2024, 10:14 am

DIN

புதுதில்லி: தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் அணுகுண்டு மிரட்டல் விடுத்த இரு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

தில்லியில் இருந்து அகமதாபாத் செல்லவிருந்த ஆகாசா விமானத்தில் பயணிப்பதற்காக கடந்த 5-ஆம் தேதி குஜராத்தை சேர்ந்த ஜிக்னேஷ் மலான், கஷ்யப் குமார் ஆகிய இருவர் வந்துள்ளனர்.

அவர்களை விமான ஏறுவதற்கு முன்னதாக ஆகாசா விமான நிர்வாகத்தை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டாம் கட்ட சோதனை செய்துள்ளனர்.

அப்போது பாதுகாவலரிடம், ஏற்கெனவே சோதனை செய்துவிட்டதாக இருவரும் தெரிவித்துள்ளனர். அதற்கு பாதுகாவலர்கள், இது எங்களின் வழக்கமான சோதனைதான் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ”நான் அணுகுண்டு எடுத்து வந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்” என்று ஒருவர் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இருவரையும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மறுத்த பாதுகாவலர்கள், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.