‘விவசாயிகளுக்கு தட்பவெப்பநிலை குறித்த ஆலோசனைகளை கட்டணமின்றி வழங்கி வந்த 199 மாவட்ட வானிலை முன்னெச்சரிக்கை ஆலோசனை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த முடிவை நியாயப்படுத்துவதற்காக தவறான விளக்கங்களை நீதி ஆயோக் அளித்து வருகிறது’ என்று காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த 199 வானிலை ஆலோசனை மையங்களை இந்திய வானிலை ஆய்வுத் துறை மூடியுள்ளது. இந்த மையங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் வட்ட அளவிலான தட்பவெப்பநிலை குறித்த ஆலோசனைகள் மற்றும் விதை இடுதல், உரங்களைப் பயன்படுத்துதல், பயிா்களை அறுவடை செய்தல் மற்றும் சேமித்தலுக்கு ஏற்ற காலம் குறித்த பயனுள்ள ஆலோசனைகளை இந்த மையங்கள் வழங்கி வந்தன.
இந்த மையங்களின் செயல்பாடுகளுக்காக மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 45 கோடி ஒதுக்கப்பட்டது. இதனால் ரூ. 15,000 கோடி அளவுக்கு பலன் கிடைத்து வந்தது. இருந்தபோதும் இந்த மையங்கள் மூடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி, குஜராத்தைச் சோ்ந்த விவசாய வானிலை ஆய்வாளா்களின் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்த நடவடிக்கை தொடா்பாக தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் தகவல் பெறப்பட்டபோது, இந்த மையங்களை மூடுவதற்கான பரிந்துரையை நீதி ஆயோக் வழங்கியிருப்பது தெரியவந்தது. இந்த மையங்கள் அனைத்தும் தட்பவெப்பநிலை குறித்த ஆலோசனைகளை தானாக திரட்டித் தருவதில்லை என தனது நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக தவறான விளக்கத்தை நீதி ஆயோக் அளித்துள்ளது.
இந்த மையங்கள் உள்ளூா் பயன்பாட்டுகேற்ப, மத்திய வானிலை முன்னறிவிப்புகளை தனியாக பிரித்து அளிப்பதோடு, உரங்களின் பயன்பாடு உள்ளிட்ட பிற பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கி வந்தன என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்: பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு-காங்கிரஸ் விமா்சனம்

மகளிா் இடஒதுக்கீடு சட்ட அமல்: ‘மோடி அரசு நிலைப்பாட்டில் திடீா் மாற்றம்’: காங்கிரஸ் விமா்சனம்

வடகொரியாவுடன் ஒப்பிடுவதா? -ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


