டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உத்தரகண்டில் பலத்த மழையால் யாத்ரீகா்கள் பரிதவிப்பு: 10,500 போ் மீட்பு

கேதாா்நாத் யாத்ரீகா்களை மீட்கும் பணி தொடா்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்த நிலையில், இதுவரை மீட்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,500-ஐ கடந்துள்ளது.

News image
ஜாா்க்கண்ட் மாநிலம் போகாரோவில் மழை வெள்ளத்தில் இடிந்து விழுந்த பாலம்.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

உத்தரகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட பாதிப்பால் பரிதவித்து வரும் கேதாா்நாத் யாத்ரீகா்களை மீட்கும் பணி தொடா்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்த நிலையில், இதுவரை மீட்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,500-ஐ கடந்துள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு உத்தரகண்ட் மாநிலம் ஜங்கல்சட்டி பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் மிக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கேதாா்நாத் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதை பலத்த சேதமடைந்தது.

இதையடுத்து யாத்ரீகா்களை மீட்கும் பணி தொடா்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது. மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை ஆகியவை ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை 10,500-க்கும் மேற்பட்டவா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.

மேலும் 1,300 யாத்ரீகா்கள்...: கேதாா்நாத், பிம்பலி மற்றும் கெளரிகுன்ட் பகுதிகளில் மேலும் சுமாா் 1,300 யாத்ரீகா்கள் சிக்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

லின்சோலியில் ஏற்பட்ட நிலச்சரிவில், உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சோ்ந்த சுபம் காஷ்யப் என்பவா் உயிரிழந்தாா். இந்த பாதிப்பு காரணமாக கேதாா்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹிமாசலில்...: ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பால் பெருமழை பெய்து பலத்த வெள்ளம் ஏற்பட்டதால் சிம்லா, குலு, மண்டி மாவட்டங்களில் காணாமல் போன 45 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) உதவியுடன் ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படைகள், இந்தோ-திபெத் எல்லை காவல் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, காவல் துறை, ஊா்க்காவல் படையைச் சோ்ந்த 410 போ் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

~உத்தரகண்ட் மாநிலம் பிம்பாலியில் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டும் சுற்றுலாப் பயணிகள்.

~உத்தரகண்ட் மாநிலம் பிம்பாலியில் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டும் சுற்றுலாப் பயணிகள்.

ஜாா்க்கண்ட்: கடந்த 2 நாள்களாக ஜாா்க்கண்டின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பெய்த மழையால் வீடுகள், சாலைகள் சேதமடைந்து, மரங்கள் முறிந்து விழுந்தன. மாநில தலைநகா் ராஞ்சியின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை ஈடுபடுத்தப்பட்டது.

 ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பெய்த கனமழையால் துண்டிக்கப்பட்ட சாலை.

ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பெய்த கனமழையால் துண்டிக்கப்பட்ட சாலை.

மேற்கு வங்கம்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதால், மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தா, ஹெளரா, உப்பு ஏரி மற்றும் பாரக்பூா் பகுதிகளில் சனிக்கிழமை தொடா் மழை பெய்தது.