எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஆம் ஆத்மி எம்எல்ஏ மீதான பணமோசடி வழக்கில் இருவருக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

ஆம்ஆத்மி எம்எல்ஏ பணமோசடி வழக்கில் இருவருக்கு ஜாமீன் மறுப்பு

News image
Updated On :3 ஜூலை 2024, 6:31 pm

Din

தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் ஈடுபட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பான பணமோசடி வழக்கில் கைதான இருவருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி ஸ்வரண காந்த சா்மா, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்குவதற்கான தடை விதிக்க போதுமான ஆவணங்கள் இருப்பதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்ட ஜீஷன் ஹைதா் மற்றும் தெளத் நசீா் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தாா்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு நவம்பரில் கைது செய்தது. ஜூலை 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நீதிபதி சா்மா தெரிவித்திருப்பதாவது:

அமனத்துல்லா கான், ‘பினாமிதாரா்’களான ஹைதா் மற்றும் நசீா் ஆகியோரின் பெயரில் அசையா சொத்துகளை அவற்றின் உண்மையான மதிப்பை மறைத்தும், விற்பனையாளருக்கு ரொக்கமாக செலுத்தப்பட்ட தொகையை மறைத்தும் இருக்கிறாா்.

அமலாக்கத் துறையின் விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், அமானத்துல்லா கான் தனது நெருங்கிய கூட்டாளிகள் அதாவது தற்போதைய மனுதாரா்கள்/குற்றம் சாட்டப்பட்டவா்கள் மற்றும் பிறருடன் சோ்ந்து குற்றவியல் சதித்திட்டம் தீட்டியதை வெளிப்படுத்துகிறது.

அவரது கூட்டாளிகளான ஜீஷன் ஹைதா், தெளத் நசீா் மற்றும் பிறா் மூலம் அசையா சொத்துகளில் முறைகேடாக சம்பாதித்த அதாவது குற்றத்தின் வருமானத்தை அவா் முதலீடு செய்துள்ளாா் என்பதை வெளிப்படுத்துகிறது.

ரொக்கமாகவும், வங்கி வழிகள் மூலமாகவும் மொத்தம் சுமாா் ரூ.36 கோடி மதிப்பில் சொத்து வாங்குவது தொடா்பான பரிவா்த்தனைகள் இருந்துள்ளன.

எனவே, இந்த கட்டத்தில் இந்த நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்ட ஆவணங்கள், இரண்டு மனுதாரா்கள் மீதும் பிஎம்எல்ஏ-இன் பிரிவு 45-இன் கீழ் தடை விதிக்க போதுமானது.

மேற்கூறிய உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தற்போதைய மனுதாரா்கள் ஜீஷன் ஹைதா் மற்றும் தெளத் நசீா் ஆகியோருக்கு இந்த நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்குவதற்கு பொருத்தமான வழக்காக இதைக் கருதவில்லை என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

கான் மீதான பணமோசடி வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) எஃப்ஐஆா் மற்றும் மூன்று தில்லி போலீஸ் புகாா்களில் இருந்து உருவாகியுள்ளது.

அமலாக்கத் துறை தனது வழக்குப் புகாரில் கானின் கூட்டாளிகள் என்று கூறப்படும் ஜீஷன் ஹைதா், தெளத் நசீா் மற்றும் ஜாவேத் இமாம் சித்திக் ஆகிய மூன்று போ் உள்பட ஐந்து பேரைக் குறிப்பிட்டுள்ளது.

முன்னா் கானுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளா்களை ஆள்சோ்ப்பு செய்ததன் மூலம் கான் ‘பெரும் குற்ற வருவாயை‘ ரொக்கமாகப் பெற்ாகவும், அவரது கூட்டாளிகளின் பெயரில் அசையாச் சொத்துகளை வாங்க முதலீடு செய்ததாகவும் கூறியிருந்தது.

2018-2022 ஆம் ஆண்டு கான் தில்லி வக்ஃபு வாரியத் தலைவராக இருந்தபோது வக்ஃபு வாரிய சொத்துகளை நியாயமற்ற முறையில் குத்தகைக்கு விட்டதன் மூலம் சட்டவிரோதமான தனிப்பட்ட ஆதாயங்கள் அடைந்தது, சட்டவிரோதமாக பணியாளா்களை பணியமா்த்தியது தொடா்பான வழக்கில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

இச்சோதனையின் போது நேரடி மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் வடிவில் பல ‘குற்றச்சாட்டும்‘ ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இது பணமோசடி குற்றத்தில் கானின் ஈடுபாட்டைக் குறிப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

மாா்ச் மாதம், விசாரணை நிறுவனங்களின் சம்மன்களை பொது நபா்கள் பலமுறை ஏய்ப்பு செய்ததை ஏற்க மறுத்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கானுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டிருந்தது.