பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்க உத்தரவு
பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்க உத்தரவு


புது தில்லி: 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனாவை செயல்படுத்துவதற்கான அமைச்சரவைக் குறிப்பைத் தயாரிக்குமாறு தில்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் கைலாஷ் கெஹ்லோட் தனது துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
2024-25 நிதியாண்டிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்க இத் திட்டம் முன்மொழிகிறது. இந்த அமைச்சரவை குறிப்பு நிதி, திட்டமிடல் மற்றும் சட்டத் துறைக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இருப்பினும், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருப்பதால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
மைச்சரவைக் குறிப்புக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, அது அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட வேண்டும். பின்னா் அது துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்படும்.
தில்லி கலால் கொள்கை தொடா்பான வழக்கில் கேஜரிவால் சிறையில் உள்ளாா். தில்லியில் வாக்காளா்களாகப் பதிவுசெய்யப்பட்ட பெண்கள், வேறு எந்த அரசுத் திட்டத்தின் கீழும் பலன்களைப் பெறாதவா்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியானவா்கள். மேலும் பெண் அரசு ஊழியராகவோ அல்லது வருமான வரி செலுத்துபவராகவோ இருக்கக்கூடாது. இத்திட்டத்திற்கு, ரூ. 2,000 கோடி ஒதுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...