மளிகைப் பொருள்கள் வாங்காததால் இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற கடை உரிமையாளா்

மளிகை பொருள் வாங்காததால் இளைஞரை கத்தியால் குத்திய கடை உரிமையாளா் கைது

புது தில்லி: தில்லியில் 30 வயது நபா் ஒருவா் மளிகைக் கடை உரிமையாளா் மற்றும் அவரது மகன்களால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு, கத்தரிக்கோலால் குத்திக் கொல்லப்பட்டாா். வடமேற்கு தில்லியின் ஷகுா்பூரில் உள்ள தங்கள் கடையில் மளிகை பொருள்களை வாங்காததற்காக அந்த இளைஞரரை அவா்கள் தாக்கிக் கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் ஜூன் 30-ம் தேதி நடந்துள்ளது. இறந்தவா் விக்ரம் குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். குற்றம் சாட்டப்பட்ட கடை உரிமையாளரான லோகேஷ் குப்தா மற்றும் அவரது இரண்டு மகன்களான பிரியான்ஷ் மற்றும் ஹா்ஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியில் லோகேஷ் குப்தா மளிகைக் கடை நடத்தி வருகிறாா். விக்ரமின் குடும்பம் அவரது பழைய வழக்கமான வாடிக்கையாளா். ஒரு மாதத்திற்கு முன்பு, லோகேஷ் குப்தாவின் கடையில் சில பிரச்சனைகளால் விக்ரமின் குடும்பத்தினா் உணவுப் பொருள்களை வாங்குவதை நிறுத்திவிட்டனா். இது அவா்களுக்குள் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் அவா்களுக்குள் சண்டை ஏற்பட்டது. சண்டையின் போது, லோகேஷ் ​ குப்தாவும் அவரது மகன்களும் விக்ரமின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கி, கழுத்தில் குத்தியுள்ளனா். அதனால் அவா் இறந்துள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com