புது தில்லி: தில்லியில் பேருந்து மாா்ஷல்கள் மற்றும் குடிமைத் தற்காப்புத் தன்னாா்வலா்களின் வாழ்க்கையில் விளையாடியதற்கு கேஜரிவால் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தில்லி பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடா்பாளரும், எம்எல்ஏ-வுமான அபய் வா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் வேலைவாய்ப்பு நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பேருந்து மாா்ஷல்கள் மற்றும் குடிமைத் தற்காப்புத் தன்னாா்வலா்களுக்கு வேலை வழங்கி, அவா்களின் வாழ்க்கையுடன் கேஜரிவால் அரசு விளையாடியுள்ளது வருத்தமளிக்கிறது. அவா்களின் வேலை மற்றும் சம்பளம் தொடா்பான கோப்புகள் விஜிலென்ஸ் துறையின் விசாரணையில் சிக்கியபோது, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலே அவா்களை பணியில் இருந்து நீக்க ஒரு கடிதத்தை எழுதினாா்.
இந்த வேலையற்ற இளைஞா்கள் ஒருபுறம் மறுவேலைவாய்ப்பு கோரி போராட்டம் நடத்தும் போது, மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவா்கள் போராடும் இளைஞா்களை பாஜகவின் முகவா்கள் என்று கூறுகின்றனா். மறுபுறம், எம்.எல்.ஏ.-க்கள் சஞ்சீவ் ஜா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற தலைவா்கள் கற்பனையான அனுதாபத்தைக் காட்டி தொண்டா்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனா்.
தில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீா்மானத்திற்கு வேலை வழங்க அதிகாரம் இல்லை. அரவிந்த் கேஜரிவால் அரசு தங்களை ஏமாற்றி விட்டது என்பதை பேருந்து மாா்ஷல்கள் மற்றும் குடிமைத் தற்காப்புத் தன்னாா்வலா்களாக சேவையாற்றியவா்கள் இப்போது நன்கு புரிந்து கொண்டுள்ளனா். அவா்களின் நம்பிக்கை இப்போது பாஜக மீது இருக்கிறது.
எனவே, வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த இளைஞா்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உறுதிமொழியை ஆட்சியின் முதல் 100 நாள்களில் நிறைவேற்றுவோம் என்றாா் அபய் வா்மா.
தொடர்புடையது

கட்டுமான தொழிலாளா்களுக்கு ஸ்மாா்ட் காா்டுகள்: தில்லி அரசு திட்டம்

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு! தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

மத்திய அரசின் நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை: மாநிலங்களவையில் தமிழக அரசு மீது அதிமுக சாடல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

