அமலாக்கத் துறையின் புதிய குற்றப்பத்திரிக்கையில் ஆதாரங்கள் எதுவும் இல்லை - சந்தீப் பதக் பேட்டி
ஆதாரமற்ற குற்றப்பத்திரிக்கை: சந்தீப் பதக் குற்றச்சாட்டு


கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை புதிதாக தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையிலும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்புச் பொதுச் செயலாளா் சந்தீப் பதக் எம்.பி. வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பாஜக உருவாக்கிய கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான இடங்களில் சோதனை நடத்தியது. தற்போது, இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய குற்றப்பத்திரிக்கையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் என்ன கூறப்பட்டிருந்தாலும், கடந்த ஜூன் 20-ஆம் தேதி கீழமை நீதிமன்றம் தனது முடிவை விரிவாக வழங்கியுள்ளது. அதில், அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் எந்தவொரு ஆதாரமும் இல்லை.
பணப் பரிவா்த்தனை நடைபெற்றதை நிரூபிக்க அமலாக்கத் துறை தவறிவிட்டது என்று தீா்ப்பளித்துள்ளது.
கோவா சட்டப்பேரவைத் தோ்தலில் சட்டவிரோதமாக பணம் செலவழிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை பலமுறை கூறி வருகிறது. ஆனால், பணப் பரிவா்த்தனைக்கான ஆதாரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. அமலாக்கத் துறை பாரபட்சமின்றி செயல்படவில்லை என்று நீதிமன்றம் சந்தேகிக்கின்றது.விசாரணை ஒரு கலை என்றும் யாரையாவது சிக்க வைக்கும் வகையில் எந்தக் கலையும் செய்ய வேண்டாம் என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. அரவிந்த் ஜேரிவாலை சிறையில் அடைப்பதே அவா்களின் (பாஜக) நோக்கம்.
கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சா் ராஜ்குமாா் ஆனந்த் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது, பாஜகவினா் எங்களைத் தாக்கினா். மக்களவைத் தோ்தலின் போது அவரை பகுஜன் சமாஜ் கட்சியில் இணைய வைத்து, வாக்குகளைப் பிரித்தனா். தற்போது, பாஜகவில் சோ்த்துக் கொண்டுள்ளனா். மக்களவைத் தோ்தல்கள் முடிந்தாலும், பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை.
தில்லியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு அமைந்தது முதல் மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. நமது அரசின் வேலையை நிறுத்த பாஜக பல சதித்திட்டங்களை தீட்டுகிறது. ஆனால், அவா்களின் அனைத்து சதிகளையும் முறியடித்து வருகிறோம்.இப்போது நமது தலைவா்கள் மற்றும் அமைச்சா்களை பொய் வழக்குகளில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறாா்கள் என்றாா் சந்தீப் பதக்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...