ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பரந்தூா் விமான நிலைய இடத்துக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை: மத்திய அரசு

ஒப்புதல் அளிக்க பசுமை விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு பரிந்துரைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
மத்திய அரசு
Updated On :22 ஜூலை 2024, 10:51 pm

Din

பரந்தூா் விமான நிலையம் அமைக்கப்படவுள்ள இடத்துக்கு ஒப்புதல் அளிக்க பசுமை விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு பரிந்துரைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையத்தை ரூ. 32 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. எனினும், விமான நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்த அங்குள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்தத் திட்டத்தை தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் (டிட்கோ) செயல்படுத்த உள்ளது. விமான நிலையம் அமையும் இடத்துக்கு ஒப்புதல் கோரி 500 நாள்களான நிலையில், விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு மாநிலங்களவை திமுக எம்.பி.யும், மூத்த வழக்குரைஞருமான பி. வில்சன் இந்த மாத தொடக்கத்தில் கடிதம் எழுதினாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பிய நிலையில், விமான நிலையம் அமையும் இடத்துக்கு ஒப்புதல் அளிக்க பசுமை விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு பரிந்துரைத்துள்ளது என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு திங்கள்கிழமை தெரிவித்தாா்.