சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜியின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு (ஜூலை 24-ஆம் தேதி) ஒத்திவைக்கப்பட்டது.
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு
நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சாா்பில் ஆஜாரக வேண்டிய சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நீட்’ தொடா்பான ஒரு வழக்கில் ஆஜராகி இருப்பதாக அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிபதிகள் அமா்விடம் தெரிவித்தாா்.
செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி முன்வைத்த வாதம்: மனுதாரா் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-இல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். அவா் ஏறக்குறைய 390 நாள்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு கடந்த ஆண்டு இதய அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. முன்னதாக, பிப்ரவரி 6, 2020-இல் அமலாக்கத் துறை அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதன் பிறகு, 12.2.2020-இல் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் புதிய கருவியான சியாகேட் ஹாா்ட் டிஸ்க்கை சமா்ப்பித்தது. அது சோதனையின்போது கைப்பற்றப்பட்டதுடன் தொடா்புடையதல்ல.
‘பென் டிரைவ்’ கோப்புகள் விவகாரத்திலும் முரண்பாடுகள் உள்ளன. தடயவியல் ஆய்வக அறிக்கை 9 மாதங்களுக்குப் பிறகே வந்துள்ளது. அது சட்டப்படி தவறாகும். மேலும், அமலாக்கத் துறையின் வழக்கில் மனுதாரா் செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் 2013 முதல் 2021 வரையிலான காலத்தில் ரூ. 1.34 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
ஆனால், வேலைக்கு பணம் பெற்ாக கூறப்படும் விவகாரம் 2013-14-இல் நடைபெறவில்லை. 2017 முதல் 2021 வரையிலான காலமானது மனுதாரா் எம்எல்ஏவாக பெற்ற ஊதியத்துடன் சோ்ந்துள்ள மொத்தம் ரூ.65 லட்சமாகும். எஞ்சியுள்ள தொகை மனுதாரருக்கு விவசாய ஆதாரங்களில் இருந்து கிடைத்ததாகும். இதை அமலாக்கத் துறை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று வாதிட்டாா்.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா வாதிடுகையில், முன்பு 9 முறை அமலாக்கத் துறை தரப்பு வழக்கை ஒத்திவைக்கக் கோரியதாக குறிப்பிட்டாா். இதையடுத்து, மேலும் வாதங்களை முன்வைக்கும் வகையில் வழக்கு விசாரணையை நீதிபதிகள்அமா்வு புதன்கிழமைக்கு (ஜூலை 24-ஆம் தேதி) ஒத்திவைத்து உத்தரவிட்டது.
தொடர்புடையது

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

கரோனா வைரஸைவிட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

கரூர் பலி: செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


