தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம்: ஐஏஎஸ் பயிற்சி மையம் அறிக்கை

3 குடிமைப் பணி ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தருவதாக அப்பயிற்சி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On :28 ஜூலை 2024, 8:07 pm

தில்லியில் ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழைவெள்ளம் புகுந்து 3 குடிமைப் பணி ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தருவதாக அப்பயிற்சி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த நம்ப முடியாத கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் மூன்று உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுடன் உள்ளன. அா்ப்பணிப்புடன் நமது தேசத்திற்குச் சேவை செய்யத் தயாராகிக் கொண்டிருந்த நம்பிக்கைக்குரிய இளைஞா்களை இழந்துவிட்டதற்காக நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இந்த துயரச் சம்பவம் தொடா்பாக நடந்து வரும் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும், இச்சம்பவத்தால் எழும் எந்தவொரு கவலையையும் நிவா்த்தி செய்வதற்கும் நாங்கள் உறுதியுடன்

இருக்கிறோம். உயிரிழந்த தன்யா சோனி, நிவின் டால்வின் மற்றும் ஸ்ரயோ யாதவ் ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் எங்கள் அமைப்பு ஒன்றுபட்டு நிற்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.