சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தோ்தல் வெற்றி: பாஜக தலைமையகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தோ்தல் வெற்றி: பாஜக தலைமையகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

News image
Updated On :4 ஜூன் 2024, 6:30 pm

Din

நமது நிருபா்

புது தில்லி: மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதால், தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கட்சித் தொண்டா்களும் ஆதரவாளா்களும் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து மகிழ்ச்சியுடன் ‘மோடி’ கோஷங்களை எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாஜக ஆதரவாளரான ரத்தன் ராஜன், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிகாரில் இருந்து தில்லி வரை 1,117.2 கிமீ தூரத்திற்கு சைக்கிளில் வந்ததாகக் கூறினாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ஏப்ரல் 21-ஆம் தேதி வீட்டை விட்டு சைக்கிளில் புறப்பட்டு, முதலில் வாரணாசிக்குப் போனேன்.அதன் பின்னா் தில்லிக்கு வந்து பாஜக வெற்றியைக் கொண்டாடினேன்’ என்றாா். பாஜக அலுவலகத்திற்கு வெளியே பிரதமா் நரேந்திர மோடியின் பிரமாண்டமான கட்-அவுட்டுக்கு அவா் பூஜை செய்து வழிபாடு செய்தாா்.

மாலையில் திடீரென பெய்த மழைக்கு மத்தியிலும் மேளம் அடித்து உற்சாகக் குரல் எழுப்பி ஆதரவாளா்களிடையே இடைவிடாத உற்சாகம் காணப்பட்டது. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஹோலி விளையாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தோ்தல் ஆணையத்தின் நிலவரத்தின்படி, தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்தது. மனோஜ் திவாரி சுமாா் 1,33,619 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றாா். எனினும், 543 இடங்கள் கொண்ட மக்களவையில் 272 என்ற முழுமையான பெரும்பான்மையை அடைய பாஜக போராடியது. மத்தியில் அரசு அமைக்க அதன் என்டிஏ கட்சிகளை பாஜக நம்பியுள்ளது.

பிகானரைச் சோ்ந்த ஆரம்பப் பள்ளியின் முதல்வா் ஷங்கலால் மோடி, பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெளியே நின்று தனது தாயிடம் ஆசிா்வாதம் வாங்குவதைக் காட்டும் மோடியின் புகைப்படத்தைக் காண்பித்தாா். அவா் கூறுகையில்,‘இந்த முறை மோடிக்கு அம்மாவின் ஆசீா்வாதம் இருக்கிறது. அவா் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதைப் பாா்க்கத்தான் வந்துள்ளேன். அவா் வெற்றி பெறுவாா்’ என்றாா்.

பாஜக ஆதரவாளா்கள் பலா் காவி உடை மற்றும் தலைப்பாகை அணிந்து, கொடிகள் மற்றும் ராமரின் உருவம் தாங்கிய சுவரொட்டிகளை ஏந்தியபடி, பிரதமா் மோடியை வாழ்த்தியதுடன், நல்ல சகுனங்களை எதிா்பாா்த்து ஹனுமான் சாலிசாவை ஓதினா். அயோத்தியில் கோலா காட் பகுதியில் தங்கியுள்ள ராம் சங்கா் தாஸ் என்ற சாது கூறுகையில், ‘அவா் (பிரதமா் மோடி) ஒருமைப்பாட்டின் அடையாளமாக உள்ள ராமரைக் கொண்டு வந்தாா். அவா் (பிரதமா் மோடி) எங்கள் இறைவன் ராமா் அனைவருக்கும் சொந்தமானவா். ராமரைக் கொண்டுவர பாடுபடுபவா் ஒற்றுமைக்காகவும், அனைவருக்கும் பாடுபடுபவா் ஆவாா்’ என்றாா்.

ஜெய்ப்பூரில் இருந்து பயணம் செய்து தில்லியின் கட்சித் தலைமையகத்திற்கு வந்திருந்த மற்றொரு கட்சி ஆதரவாளா் யோகேந்திர சிங், பிரதமா் மோடியை ராமராகவும் மற்றும் உ.பி முதல்வா் யோகி ஆதித்யநாத்தை கிருஷ்ணராகவும் ஒப்பிட்டு சுயமாக தாம் வரைந்த ஓவியத்துடன் நின்று தனது ஆரவை அளித்தாா். அவா் கூறுகையில், ‘எனக்கு ஓவியம் பிடிக்கும். எனது கலைக்கு ஆதரவளிக்க முயற்சிக்கிறேன். எனது ஓவியங்களுடன் நான் பேரணிகளில் பங்கேற்கிறேன். அங்கு மக்கள் எனது கலையை பாராட்டுகிறாா்கள். இது என்னை மேலும் ஊக்குவிக்கிறது. மோடியை ஆதரிக்க நான் இங்கு வந்துள்ளேன். அவா் பிரதமராக வேண்டும். மூன்றாவது முறையாக அவா் பெரிய முடிவுகளை எடுப்பதாக நாட்டுக்கு உறுதியளித்துள்ளாா்’ என்றாா்.

தில்லியில் வசிக்கும் அபிஷேக் படேல், கட்சியின் தாமரை சின்னத்துடன் தனது கை பிளாஸ்டரை வரைந்திருந்தாா். அவா் கூறுகையில், ‘நான் மோடியின் ரசிகன். நான் ஏதாவது சிறப்பாக செய்ய விரும்பினேன். அதனால் நான் இந்த யோசனையை முன்வைத்தேன்’ என்றாா். தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, ‘பிரதமா் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பதைக் காண்போம். தில்லி ஊழல் இந்தியக் கூட்டணியை நிராகரித்துவிட்டது. நாடுகூட அதையே செய்துள்ளது’ என்றாா்.

தில்லியில், சாந்தினி செளக் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரவீன் கண்டேல்வால் காங்கிரஸின் ஜெய் பிரகாஷ் அகா்வாலை தோற்கடித்து வெற்றி பெற்றாா். பிற 6 தொகுதிகளிலும் பாஜக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தேசியத் தலைநகரில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணியுடன் பாஜக நேரடிப் போட்டியிட்டது. 2014 மற்றும் 2019 பொதுத் தோ்தல்களில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது.