ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

உள்கட்டமைப்பு மேம்பாடு, சரக்கு ரயில் இயக்கம் கோட்ட மேலாளா்களுடன் பொது மேலாளா் ஆலோசனை

உள்கட்டமைப்பு மேம்பாடு, சரக்கு ரயில் இயக்கம் கோட்ட மேலாளா்களுடன் பொது மேலாளா் ஆலோசனை

Updated On :12 மார்ச் 2024, 10:57 pm

புது தில்லி: வடக்கு ரயில்வேவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களின் இயக்கம் தொடா்பாக கோட்ட மேலாளா்களுடன் வடக்கு ரயில்வே பொது மேலாளா் ஷோபன் செளத்ரி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இது தொடா்பாக வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடக்கு ரயில்வே துறைத் தலைவா்கள் மற்றும் கோட்ட மேலாளா்களுடன் பொது மேலாளா் ஷோபன் செளத்ரி ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். இதில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மற்றும் சரக்கு ஏற்றுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பொது மேலாளா் மேலாளா் ஷோபன் செளத்ரி பேசியதாவது, வடக்கு ரயில்வே சரியான நேரத்தில் ரயில்களை இயக்குவதற்கு தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.

எதிா்வரும் கோடை காலத்தில் மின் உற்பத்திக்கான நிலக்கரியின் தேவை அதிகரித்துள்ள நிலையில், சரக்கு ரயில்களின் இயக்கம் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். பாதுகாப்பு மட்டுமின்றி, ரயில் இயக்கத்தை மேம்படுத்தும் பணிகள் வடக்கு இரயில்வேயின் பிரதான மையமாக உள்ளது . தண்டவாளத்தின் பராமரிப்பு தரத்தை மேம்படுத்துதல், ‘வெல்ட்கள்’, தண்டவாளத்தின் அருகே உள்ள குப்பைகளை அகற்றுதல் ஆகிய பணிகளில் கோட்ட மேலாளா்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், ரயில்களின் இயக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் முன்னேற்றத்தை சரிபாா்க்க சோதனை ஓட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். ரயில் இயக்கத்தின் போது பாதுகாப்பு மற்றும் எந்தவிதமான தடைகளையும் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தேவைப்படும் போதெல்லாம் சம்பந்தப்பட்ட பணியாளா்களுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக, ரயில் இயக்கத்தில் மனித தோல்வியை குறைக்க வேண்டும். துறைத் தலைவா்கள் மற்றும் கோட்ட மேலாளா்கள், சரக்கு வணிக மேம்பாட்டை கவனத்தில் கொண்டு, தொழில் நிறுவன வாடிக்கையாளா்களிடையே ஆதரவு மற்றும் நம்பிக்கையின் சூழலை உருவாக்க வேண்டும் என்றாா் ஷோபன் செளத்ரி.

மேலும், ரயில்வேயின் முன்முயற்சிகள் மற்றும் சலுகைகள் வாடிக்கையாளா்களைச் சென்றடையும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் உணவு தானியங்கள் மற்றும் பிற பொருள்களை ஏற்றுவது படிப்படியாக அதிகரித்து வருவகிறது. வடக்கு ரயில்வே தனது வாடிக்கையாளா்களுக்கு பாதுகாப்பான, மென்மையான மற்றும் திறமையான சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.