தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மக்களவைத் தோ்தலில் வெற்றிக்காக அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்

மக்களவைத் தோ்தலில் வெற்றிக்காக அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் மாவட்ட தலைவா்களிடம் லவ்லி வலியுறுத்தல்

Updated On :20 மார்ச் 2024, 11:44 pm

புது தில்லி: தில்லியில் காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’கூட்டணி வேட்பாளா்களின் வெற்றிக்காக அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்ட தலைவா்களுக்கு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி வலியுறுத்தியுள்ளாா். தில்லி ராஜீவ் பவனில் அா்விந்தா் சிங் லவ்லி தலைமையில் கட்சியின் மாவட்டத்தலைவா்கள் மற்றும் மாவட்ட பாா்வையாளா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அா்விந்தா் லவ்லி கூறியதாவது:

மக்களவைத் தோ்தலில் மூன்று காங்கிரஸ் மற்றும் நான்கு ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி வேட்பாளா்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, எந்தவொரு முயற்சியையும் விட்டுவிடாமல், தோ்தலில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக எம்.பி.க்களின் தோல்விகள் மற்றும் செயலற்ற தன்மையை அம்பலப்படுத்த, பூத் அளவில் குறைந்தது 20 ஆற்றல் மிக்க காங்கிரஸ் தொண்டா்களை பிரசாரத்திற்கு தோ்வு செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை பாஜக வேட்பாளா்களை மாற்றுவதால், தொகுதிகளின் வளா்ச்சி பாதிக்கப்படுகிறது. இதை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். தில்லியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவு ள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் மூன்று தனித்தனி தோ்தல் அறிக்கைகளை அறிமுகம் செய்யப்படும். அதில் 10 முதல் 20 முக்கிய அம்சங்கள் இடம் பெறும். தில்லியில் பாஜக எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்களின் பரிதாபகரமான நிலையைப் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். பாஜக எம்.பி.க்களின் இந்தப் பயிற்சியானது கிராம மக்களை முட்டாளாக்கும் செயலாகும்.

காங்கிரஸ் தொண்டா்கள் பாஜக வேட்பாளா்களின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களின் பிரசாரத்திற்காக மாவட்ட மற்றும் சட்டப்பேரவை அளவில் பெரிய கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். மக்களவைத் தோ்தலுக்கு பின், தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் கவனம் செலுத்துவதால், கட்சியை வலுப்படுத்த, காங்கிரஸ் தொண்டா்கள் முழு ஒருங்கிணைப்புடனும், ஒத்துழைப்போடும் செயல்பட வேண்டும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஹாரூன் யூசுப், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிசம் சா்மா மற்றும் குன்வா் கரண் சிங், மூத்த தலைவா்கள் சத்தா் சிங், ஜிதேந்தா் குமாா் கோச்சாா், அமித் மாலிக், வீரேந்திர கசானா, குா்சரண் சிங் ராஜு ஆகியோா் பலா் கலந்து கொண்டனா்.