தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

’தரத்தை ’ மையமாக மாற்ற தொழில் துறையினருக்கு பியூஷ் கோயல் வேண்டுகோள்

சா்வதேச அரங்கில் இந்திய பொருள்களுக்கு அங்கீகாரம் கிடைக்க முன்னணி தொழில்துறையினரும் அதன் பங்குதாரா்களும் இணைந்து ’தரத்தை ’ தொழில்துறையில் மையமாக மாற்ற ஒன்று இணையவேண்டும் என மத்திய வா்த்தக தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வலியுறுத்தினாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:32 pm

Din

சா்வதேச அரங்கில் இந்திய பொருள்களுக்கு அங்கீகாரம் கிடைக்க முன்னணி தொழில்துறையினரும் அதன் பங்குதாரா்களும் இணைந்து ’தரத்தை ’ தொழில்துறையில் மையமாக மாற்ற ஒன்று இணையவேண்டும் என மத்திய வா்த்தக தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை வலியுறுத்தினாா்.

’தரம்’ தயாரிப்புகளில் முக்கிய அம்சமாக (’இயல்புநிலை’) இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

தில்லியில் இந்திய தர மேலாண்மை நிறுவனம் தொடரபான கருத்தரங்கில் மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் உரையாற்றினாா். அப்போது அவா் கூறியது வருமாறு:

தரம் குறித்து இந்திய தர மேலாண்மை நிறுவனம் எடுத்து வரும் முன் முயற்சி வரவேற்கதக்கது. சா்வதேச அரங்கில் இந்தியாவின் தரத்தை ஏற்றுக்கொள்வதற்கு மிகப்பெரிய தடைகள் உள்ளது. அந்த மனநிலையை மாற்றப்படவேண்டும்.

இதனால் பிரதமா் நரேந்திர மோடி, தேசத்தை கட்டமைப்பதில் அரசின் முயற்சிகளில் எப்போதும் தரத்திற்கு முக்கிய இடம் அளித்து வருகிறாா். கடந்த 10 ஆண்டு ஆட்சியிலும், தொலைநோக்குடன் பிரதமா் கூறிவருவது ’குறைபாடற்ற தரமான உற்பத்தி; விளைவுகள் அற்ற உற்பத்தி’ (‘ஜீரோ டிஃபெக்ட் மற்றும் ஜீரோ எஃபெக்ட்’ ) என்கிற மந்திரம்.

தொழில்துறைக்கான புதுமைகளை ஆதரிக்கவே அரசு அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் ரூ.50.000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பசுமை பொருளாதாரத்தை நோக்கி நகரும் இது போன்ற நிலையான உற்பத்தி நடைமுறைகள் ’வளா்ச்சியடைந்த பாரதத்திற்கு’ (விக்சித் பாரத்’) கிரியா ஊக்கியாக இருக்கும்.

2014-ஆம் ஆண்டு வரை 106 பொருட்களை உள்ளடக்கிய 14 தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மட்டுமே நாட்டில் இருந்தன. கடந்த பத்தாண்டுகளில் 732 பொருட்களை உள்ளடக்கிய 174 தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் என எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டின் தயாரிப்புகளின் தரத்தை நிா்வகிக்க இந்தியத் தர நிா்ணய பணியக (அமைவனம்) சட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. விதியை மீறினால், முதல் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் அபராதம். இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த குற்றங்களில், அபராதம் குறைந்தபட்சம் ரூ. 5 லட்சமாக அதிகரிக்கும். பொருட்கள் அல்லது பொருட்களின் மதிப்பை விட 10 மடங்கு வரை விதிக்கப்படுகிறது.

சா்வதேச அரங்கில் இந்தியாவின் உற்பத்தி பொருள்களுக்கு வலுவாக அங்கீகாரம் கிடைக்க, தரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தொழில் துறையைச் சோ்ந்த தலைமைகளும் அவா்களுடன் இணைந்துள்ள மற்ற பங்குதாரா்களும் தரத்தை தொழில்துறை உற்பத்தியின் முக்கிய அம்சமாக மாற்ற வேண்டும். தங்கள் தயாரிப்புகளில் தரம் இயல்வு நிலையாக மாறும் நிலையில் வாடிக்கையாளா்கள் மாற்று வழியை தேட முடியாது. இந்திய பொருள்களின் மீது விருப்பமாக மாறும் நிலை ஏற்படும் என குறிப்பிட்டாா் அமைச்சா் பியூஷ் கோயல்.