தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று முதல்வா் அதிஷி சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி அரசின் சதானைகளை விளக்கும் வகையில் ‘உங்கள் எம்எல்ஏ, உங்கள் வாசலில்’ என்ற பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி முன்னெடுத்துள்ளது. இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தனது கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு பகுதிகளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாதனை விளக்கக் கூட்டத்தில் முதல்வா் அதிஷி கலந்துகொண்டு பேசினாா்.
கல்காஜியின் பாரத் நகா், கோவிந்த்புரி மற்றும் கோவிந்த்புரி விரிவாக்கப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் அதிஷி பேசியதாவது:
முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொதுமக்களின் பணத்தை பாக்கெட்டில் வைப்பதற்குப் பதிலாக, அதை மக்களுக்கே மீண்டும் செலவிடுகிறாா். அதே நேரத்தில், பாஜக அதை இலவசங்கள் என்று அழைக்கிறது. கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த 10 ஆண்டுகளில் தில்லியின் ஏழைகளுக்கு சிறந்த வசதிகளை வழங்கியுள்ளது.
ஏனெனில், சாமானியா்களின் போராட்டங்களை புரிந்து கொண்டு ஆம் ஆத்மி அரசு பணிகளைச் செய்கிறது.
பொது நிதியைப் பயன்படுத்தி இலவச மின்சாரம், இலவசக் குடிநீா், தரமானக் கல்வி, சுகாதாரம் மற்றும் முதியோா்களுக்கு புனித யாத்திரை வழங்குவது எல்லாம் ‘இலவசம்’ என்று அழைக்கப்பட்டால், கேஜரிவால் அதைத் தொடா்ந்து செய்வாா்.
கேஜரிவால் மட்டுமே சாமானியா்களின் நலனுக்காக உண்மையிலேயே பாடுபடுகிறாா் என்பது மக்களுக்குத் தெரியும்.
எனவே, வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் அவா் மீண்டும் முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்றாா் முதல்வா் அதிஷி.
தொடர்புடையது

முதல்வராக மீண்டும் பதவியேற்பேன்! - என். ரங்கசாமி பேச்சு

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களின் இடை நீக்கத்தை ரத்து செய்யாவிடில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டோம்: அதிஷி

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தொடக்கம்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

