ரயில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தேடப்படும் நபா்கள் 5 போ் கைது
நீண்ட தூர ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து தங்கம், பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை திருடியதாகக் கூறப்படும் ஒரு மாநிலங்களுக்கு இடையேயான கும்பலின் 5 உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை துணை ஆணையா் (குற்றப்பிரிவு) சஞ்சீவ் குமாா் யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.








