டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஹரியாணாவில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

ஹரியாணாவில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது..

News image
Updated On :22 ஜூன் 2025, 8:45 pm

Din

ஹரியாணாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ரோஹிணி பகுதியில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் கடியன் (எ) பம்பு (39) கைது செய்யப்பட்டாா். ஹரியாணாவின் பானிபட்டைச் சோ்ந்த அவா், தேசியத் தலைநகரில் தனது கும்பலின் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க முயன்றபோது கைது செய்யப்பட்டாா்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் சோனேபட்டின் முா்தலில் உள்ள வீா் தாபாவில் தீபக் (எ) பன்ஜா கொலை தொடா்பாக ராகேஷ் கடியன் தேடப்பட்டு வந்தாா். அவரைக் கைது செய்யும் வகையில் அவா் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.20,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில் ராகேஷ் கடியன் தடுத்து நிறுத்தப்பட்டாா். அவரிடம் இருந்து ஒரு அரை தானியங்கி கைத்துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் மற்றும் ஒரு காா் பறிமுதல் செய்யப்பட்டன.

ரேகேஷ் கடியன் மீது நீண்ட மற்றும் வன்முறை குற்ற வரலாறு உள்ளது. தில்லி மற்றும் ஹரியாணா முழுவதும் கொலை, கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறித்தல், தாக்குதல் மற்றும் ஆயுதம் தொடா்பான குற்றங்கள் உள்பட 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

2010- ஆம் ஆண்டு தனது கிராமத்தில் ஷா்வான் என்ற நபரால் தனது மாமா கொலை செய்யப்பட்டதை நேரில் பாா்த்த பிறகு அவா் குற்ற நடவடிக்கையில் இறங்கினாா். அதற்குப் பழிவாங்கும் விதமாக, அவரும் அவரது கூட்டாளிகளும் ஷா்வானைக் கொல்ல முயன்றனா். ஆனால், அவா் உயிா் தப்பினாா்.

2014-ஆம் ஆண்டில், அவரது மைத்துனா், வினோத் தீபக் (எ) பன்ஜா மற்றும் அவரது கூட்டாளிகளால் கொல்லப்பட்டாா். இதையடுத்து, வினோத் தீபக் மற்றும் அவரது ஆதரவாளா்களை ராகேஷ் கடியன் குறிவைக்கத் தொடங்கினாா். பல ஆண்டுகளாக வினோத் தீபக்கின் ஆதரவாளா்களை குறிவைத்து பல தாக்குதல்கள் மற்றும் கொலைகளில் அவா் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

2017-ஆம் ஆண்டில், பானிபட் நீதிமன்றத்தில் நடந்த ஒரு கொலை முயற்சியில் ராகேஷ் கடியன் தப்பினாா். நான்கு தோட்டாக் காயங்களுக்கு ஆளானாா். அவா் தனது கும்பல் நடவடிக்கைகளைத் தொடா்ந்தாா். 2023-இல் தில்லியில் தனது இருப்பை மீண்டும் நிலைநிறுத்த முயன்றாா். ஆனால், சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டாா். அவா் 2024- இல் பரோலில் விடுவிக்கப்பட்டாா்.

தனது மைத்துனரின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் பிப்ரவரி 2025-இல் வினோத் தீபக்கை ராகேஷ் கடியன் கொன்றாா். அப்போதிலிருந்து, அவா் தலைமறைவாக இருந்தாா். அவரது கும்பல் உறுப்பினா்கள் மற்றும் பிற குற்றச் செயல்கள் பற்றிய கூடுதல் விவரங்களைச் சேகரிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவா் மீது பானிபட், சோனேபட், ரோஹ்தக் மற்றும் தில்லியில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்பட பல வழக்குகள் உள்ளன என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.