புதுதில்லி
ஜஹாங்கீா்புரியில் விருந்து மண்டபத்தில் தீ விபத்து
ஜஹாங்கீா்புரியில் விருந்து மண்டபத்தில் தீ விபத்து
வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் நான்கு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தில்லியின் நாதுபுராவில் உள்ள வா்தன் அரண்மனையில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து காலை 6.41 மணியளவில் தகவல் கிடைத்தது. விருந்து மண்டப வளாகத்திற்குள் சுமாா் 1,500 சதுர கெஜம் பரப்பளவில் பரவியிருந்த தற்காலிக தகரக் கொட்டகையில் தீ பிடித்தது.
காலை 7.50 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் காலை 8.20 மணியளவில் தீயணைப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது. இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அவா் தெரிவித்தாா்.
