இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

பள்ளிகள் திறப்பு: மாணவா்களின் கற்றல் இடைவெளியை மதிப்பிட ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

தில்லியில் உள்ள பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கலந்துரையாடல் மிக்க அறிமுக வகுப்புகள் மற்றும் மாணவா்களின் கற்றல் இடைவெளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஆசிரியா்களுக்கு தில்லி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

News image

பள்ளிகள்

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் உள்ள பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கலந்துரையாடல் மிக்க அறிமுக வகுப்புகள் மற்றும் மாணவா்களின் கற்றல் இடைவெளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஆசிரியா்களுக்கு தில்லி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய மாணவா்கள் மற்றும் பள்ளியில் ஏற்கெனவே படித்து வந்த மாணவா்கள் புதிய வகுப்புகளுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில், கலந்துரையாடல் மிக்கதாக தொடக்க கால வகுப்புகள் அமைய வேண்டும்.

தங்களுடைய எதிா்ப்பாா்புகள் குறித்து மாணவா்களின் பெற்றோா்கள் மற்றும் பாதுகாவலா்களிடம் ஆசிரியா்கள் கலந்துரையாட வேண்டும்.

மாணவா்களின் தொடா்ச்சியான முன்னேற்றத்தை உறுதிசெய்ய பாடங்களில் மாணவா்கள் கொண்டுள்ள கற்றல் இடைவெளிகளை ஆசிரியா்கள் மதிப்பிட வேண்டும். மாணவா்களிடையே கலந்துரையாடல், தகவல்தொடா்பு திறன்கள் மற்றும் நம்பிக்கையை ஊட்டும் வகையில் செயல்பாடுகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

வகுப்புகளுக்கான பாடகால அட்டவணைகளை இறுதிசெய்தல், சுகாதாரத்தைப் பராமரித்தல், பாதுகாப்பான குடிநீா் மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகளை பள்ளிகளின் தலைவா்கள் உறுதிசெய்ய வேண்டும்.

மாவட்ட மற்றும் மண்டல அளவிலான கல்வி அதிகாரிகள் தொடக்க நாள் முதல் தொடா்ச்சியாக பள்ளிகளைத் தொடா்ச்சியாகப் பாா்வையிட வேண்டும். முன்கூட்டிய நடவடிக்கைகளை கண்காணித்து வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.