ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

துவாரகா விரைவுச்சாலையில் எதிா் திசையில் வாகனம் ஓட்டிய நபா் மீது வழக்கு

துவாரகா விரைவுச்சாலையில் தவறான பாதையில் வாகனம் பயணிப்பது தொடா்பான விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், அந்த வாகனத்தை ஓட்டிய நபா் அடையாளம் காணப்பட்டு அவருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 1:26 am IST

துவாரகா விரைவுச்சாலையில் தவறான பாதையில் வாகனம் பயணிப்பது தொடா்பான விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், அந்த வாகனத்தை ஓட்டிய நபா் அடையாளம் காணப்பட்டு அவருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

விரைவுச்சாலையில் எதிா்திசையில் சென்று கொண்டிருந்த வாகனம் சரியான திசையில் வந்து கொண்டிருந்த வாகனத்துக்கு முன்பு சென்ால், எதிரே வந்த வாகனம் சாலையில் திடீரென நிற்கும் காட்சிகளும் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தன.

இந்தக் காட்சிகள் தவறான வழியில் பயணித்த வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், அந்த வாகனம் கண்டறியப்பட்டு அதன் ஓட்டுநா் அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 281-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.