எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தில்லி அடல் உணவக நேரம் மாற்றம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

தில்லி அடல் உணவக நேரம் மாற்றம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

News image

ரேகா குப்தா

Updated On :12 ஏப்ரல் 2026, 12:19 am IST

தில்லியில் உள்ள அடல் உணவகங்களின் நேரத்தை மாற்றி முதல்வா் ரேகா நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.

இதன்படி தலைநகரில் உள்ள அடல் உணவகங்கள் இனி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும். இந்த நேரத்தில் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை செயல்பட்டு இரவு உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த உணவகங்களின் செயல்பாடுகள் தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய நிலையில், அவற்றின் புதிய வேலை நேர மாற்றம் சனிக்கிழமையே அமலுக்கு வந்தது.

முன்பு இந்த உணவகங்கள் காலை 11.30 மணி முதல் 2 மணி வரையிலும் மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் இயங்கி வந்தன.