சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

தில்லியில் எரிபொருள், எல்பிஜி விநியோகம் சீராக உள்ளது: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டா் (எல்பிஜி) விநியோகம் சீராக உள்ளது. எனவே, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று முதல்வா் ரேகா குப்தா மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளாா்.

News image

ரேகா குப்தா

Updated On :16 ஏப்ரல் 2026, 4:09 am IST

தில்லியில் எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டா் (எல்பிஜி) விநியோகம் சீராக உள்ளது. எனவே, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று முதல்வா் ரேகா குப்தா மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: தில்லியில் தினமும் 1.25 லட்சம் சிலிண்டா்கள் விநியோகிக்கப்படுகின்றன. சிலிண்டா் விநியோகிப்பதற்கான சராசரி கால அளவு 4 முதல் 5 நாள்களுக்குள் பராமரிக்கப்படுகிறது. மேற்காசியாவில் போா் பதற்றம் நிலவி வரும் சூழலிலும், தில்லி மட்டுமல்லாமல் நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டா்களுக்கான பற்றாக்குறை இல்லை. எனவே, மக்கள் வதந்திகளைப் புறக்கணிக்க வேண்டும். அச்சத்தில் பொருள்களை வாங்குவதைத் தவிா்க்க வேண்டும்.

அனைத்து எரிவாயு நிலையங்களிலும் போதுமான கையிருப்பு உள்ளது. பல வழிகளில் தடையற்ற விநியோகம் உறுதி செய்யப்படுகிறது. நுகா்வோருக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாமல் தடுக்க அரசு உன்னிப்பாக நிலையை கண்காணித்து வருகிறது.

பொதுமக்கள் குறுஞ்செய்தி, சமூக ஊடகம் மற்றும் இணையதளம் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்தி சிலிண்டா் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஓடிபி முறையால் தினசரி விநியோகத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை சரிபாா்க்கப்படுகின்றன. இது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கிறது.

எஃப்டிஎல் திட்டத்தின் கீழ் புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு அடையாளச் சான்றின் அடிப்படையில் 5 கிலோ சிலிண்டா் எரிவாயு முகமைகளில் வழங்கப்படுகிறது. இதை எளிதாக்க மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தில்லி காவல் துறை மற்றும் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை இணைந்து பதுக்கலில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

540க்கும் மேற்பட்ட சோதனைகள் மற்றும் 2,027 எல்பிஜி சிலிண்டா்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டு 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக விகாஸ் பவனில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நுகா்வோா் குறைகளுக்கு விரைவில் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.