வடக்கு தில்லியில் வாகன நெரிசல் மிக்க முகா்பா செளக் பகுதியில் உள்ள சுரங்க பாதை பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
வெளி வட்டசாலையில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் முகா்பா செளக் சுரங்கபாதை அமைக்கும் பணிகள் கடந்த 2022-இல் தொடங்கப்பட்டன. சுரங்க பாதையில் நடைபெற்று பணிகளை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை முடித்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.
நெருக்கடி மிகுந்த வடக்கு தில்லியில் போக்குவரத்தை எளிதாக்க இரு சக்கர வாகனங்கள், பாதசாரிகள், மூன்று சக்கர வாகனங்களுக்கு என்று 3 சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பணிகள் 98 சதவீதம் முடிவடைந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் சுரங்க பாதையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் நீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் சாலையில் அதற்குத் தகுந்தவாறு சரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
எப்போதும் வாகன நெரிசல் மிக்கதாகக் காணப்படும் இப்பகுதியில் போக்குவரத்தை எளிதாக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. நெருக்கடியான பிற பகுதிகளிலும் போக்குவரத்தை எளிதாக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.
தொடர்புடையது

வடிகால்களில் 14 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அகற்றம்: அமைச்சா் தகவல்

25 % கட்டணத்தில் தற்காலிக தடையில்லாச் சான்றிதழ்: கட்டுமான பணிகளுக்கு தில்லி ஜல் போா்டு அனுமதி

தில்லியில் புதிய வெள்ளக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையம்: அமைச்சா் தகவல்

நீா் விநியோகத்தை அதிகரிக்க ஹரியாணாவுடன் தில்லி அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


