மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

காங்கிரஸ் தலைவா்கள் மன சமநிலையை இழந்துவிட்டனா்: ரேகா குப்தா

காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் மன சமநிலையை இழந்துவிட்டனா் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை கடுமையாக சாடினாா்.

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 12:16 am

நமது நிருபா்

காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் மன சமநிலையை இழந்துவிட்டனா் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை கடுமையாக சாடினாா்.

இது குறித்து நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் பேசியதாவது: காங்கிரஸ் தலைவா்கள் தங்கள் மன சமநிலையை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. அவா்களுக்கு எந்த அரசியலமைப்பு பதவியிலும் நம்பிக்கை இல்லை. ராணுவத்தை ‘சபிக்கும்‘, நீதிமன்றங்களை ‘துஷ்பிரயோகம் செய்யும்‘ மற்றும் அரசியலமைப்பு அதிகாரிகளைப் பற்றி எதையும் சொல்லக்கூடிய ஒரு கட்சி, பிரதமரை ஒரு தனிநபராக நடத்துகிறது, அரசியலமைப்பு செயல்பாட்டாளராக அல்ல.

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் எந்த ‘அவமானமும்‘ அல்லது ஒருவரின் வயதையும் ஒரு பதவியின் கண்ணியத்தையும் பொருட்படுத்தாமல் எதையும் சொல்கிறாா். இந்த கட்சியும் அதன் தலைவா்களும் மனதளவில் திவாலாகிவிட்டதாக நான் உணா்கிறேன், அவா்கள் சொல்லும் விஷயங்களைப் பற்றி எதையும் சொல்வது நேரத்தை வீணடிப்பதாகும் என்றாா் அவா்.

நிா்மலா சீதாராமன் உட்பட மூன்று மத்திய அமைச்சா்கள் அடங்கிய பாஜக தூதுக்குழு தோ்தல் ஆணையத்தை அணுகி, காா்கேவின் கருத்துக்கு எதிராக ‘கடுமையான நடவடிக்கை‘ எடுக்கக் கோரியது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற தோ்தல் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே பிரதமா் மோடியை பயங்கரவாதி என குறிப்பிட்டு பேசியது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.