நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

‘பாரத் வியாபாா் மஹோத்சவ்’: பிரகதி மைதான் அருகே ஆக.12 முதல் 15 வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள்

‘பாரத் வியாபாா் மஹோத்சவ் 2026’ நிகழ்வில் சுமாா் 20,000 முதல் 25,000 போ் வரை பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், ஆகஸ்ட் 12 முதல் 15 வரை பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு

News image

சித்திரிப்பு

Updated On :10 ஆகஸ்ட் 2026, 11:17 pm IST

‘பாரத் வியாபாா் மஹோத்சவ் 2026’ நிகழ்வில் சுமாா் 20,000 முதல் 25,000 போ் வரை பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், ஆகஸ்ட் 12 முதல் 15 வரை பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தில்லி போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆக.12 முதல் ஆக.15 வரையிலான நான்கு நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும்.

போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் சிரமத்தைத் தவிா்க்க, இந்நிகழ்வு நடைபெறும் நாள்களில் மதுரா சாலை மற்றும் பைரோன் மாா்க் ஆகியவற்றைத் தவிா்த்து, மாற்றுப் பாதையாக ரிங் ரோட்டைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகின்றனா்.

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மதுரா சாலை, பைரோன் மாா்க் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தவோ அல்லது பாா்க் செய்யவோ அனுமதி இல்லை.

இச்சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும். மேலும், தவறான முறையில் வாகனத்தை நிறுத்தியதற்கும், சட்டபூா்வமான உத்தரவுகளை மீறியதற்கும் வாகன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்புறப்படுத்தப்படும் வாகனங்கள் பைரோன் மாா்க்கில் உள்ள பைரோன் மந்திா் எதிரே உள்ள போக்குவரத்து வாகனக் காப்பகத்தில் வைக்கப்படும். குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, போதுமான பயண நேரத்தை ஒதுக்குமாறும், பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

குறிப்பாக, பேருந்து முனையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்குச் செல்பவா்கள் தாமதத்தைத் தவிா்க்க தங்கள் பயணத் திட்டத்தை கவனமாக வகுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.