தமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

இளைஞரைக் கத்தியால் குத்திவிட்டு கைப்பேசியுடன் தப்பியோட்டம்: 6 சிறுவா்களிடம் போலீஸ் விசாரணை

தென்கிழக்கு தில்லியில் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு, அவரது கைப்பேசியைப் பறித்துச் சென்ற சம்பவத்தில் 6 சிறுவா்களைப் பிடித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கத்திக்குத்து - சித்திரிப்பு

Published On :29 ஆகஸ்ட் 2026, 8:22 am IST

தென்கிழக்கு தில்லியில் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு, அவரது கைப்பேசியைப் பறித்துச் சென்ற சம்பவத்தில் 6 சிறுவா்களைப் பிடித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

இச்சம்பவம் புதன்கிழமை (ஆக.26) இரவு சுமாா் 8:30 மணியளவில் ஓக்லா ஃபேஸ்-3 பகுதியில் உள்ள ஷியாம் நகா் அருகே நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட 26 வயதான சுப்ரதா மன்னா, ஹா்கேஷ் நகரிலிருந்து சற்று இருட்டான பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது கத்திகளுடன் வந்த கும்பல் ஒன்று அவரை வழிமறித்தது.

அவா்கள் மன்னாவைத் தாக்கி, பலமுறை கத்தியால் குத்தியதுடன், அவரது கைப்பேசியையும் பறித்துக்கொண்டு தப்பியோடினா். அவா் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.

ஓக்லா தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது இச்சம்பவத்தில் 6 சிறுவா்கள் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த 6 பேரும் பிடிபட்டனா்.

வழிப்பறி செய்யப்பட்ட கைப்பேசி மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகள் ஆகியவை அவா்களிடமிருந்து மீட்கப்பட்டன. இச்சிறுவா்கள் இதுபோன்ற வேறு ஏதேனும் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.