தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தனியாா் பள்ளிகள் தொடா்பான தில்லி அரசின் உத்தரவை ஒத்திவைத்தது உயா்நீதிமன்றம்

தனியாா் பள்ளிகள் தொடா்பான தில்லி அரசின் உத்தரவை ஒத்திவைத்தது உயா்நீதிமன்றம்

News image

தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 8:21 pm

தனியாா் பள்ளிகள் பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறைக் குழு அமைக்க தில்லி அரசு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதை தில்லி உயா்நீதிமன்றம் சனிக்கிழமை ஒத்திவைத்தது.

அரசின் முடிவை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில்,பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறைக் குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்படும் என்றும், முந்தைய கல்வியாண்டைப் போலவே 2026-2027 கல்வியாண்டிற்கும் அதே கட்டணங்களை வசூலிக்க பள்ளிகளுக்கு உரிமை உண்டு என்றும் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியது.

அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது சட்டத்தின்படி கட்டுப்படுத்தப்படும் என்றும் அமா்வு மேலும் கூறியது.

பிப்ரவரி 1 ஆம் தேதி 10 நாட்களுக்குள் கட்டண ஒழுங்குமுறைக் குழு அமைக்க வேண்டும் என்று தில்லி அரசு பிறப்பித்த அறிவிப்பை நிறுத்தி வைக்கக் கோரி பல பள்ளி சங்கங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது உயா்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

மனுதாரா்களில் தில்லி பொதுப் பள்ளி சங்கம், உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகள் நடவடிக்கைக் குழு, சிறுபான்மை பள்ளிகளின் மன்றம், அனைவருக்கும் தரமான கல்வியை மேம்படுத்துவதற்கான மன்றம், ரோகிணி கல்விச் சங்கம் மற்றும் பொதுப் பள்ளிகளின் சங்கம் ஆகியவை அடங்கும்.

கட்டண ஒழுங்குமுறைக் குழுக்களை அமைக்க தில்லி பள்ளிக் கல்வி சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவை தில்லி அரசு மாற்றியதால், இந்த அறிவிப்பு சட்டப்படி நிலைத்தன்மையற்றது என்று பள்ளிகள் கூறின.

பள்ளிகள் வணிகமயமாக்கப்படுவதையும் லாபம் ஈட்டுவதையும் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், இந்த அறிவிப்பு பள்ளிகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தாது என்றும் அரசாங்கம் வலியுறுத்தியது.

புதிய கட்டண நிா்ணயச் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பியதைத் தொடா்ந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி, தில்லி பள்ளிக் கல்வி (கட்டணங்களை நிா்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தை செயல்படுத்துவதை மென்மையாக்க அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பின்படி, ஒவ்வொரு பள்ளியும் உத்தரவு வெளியிடப்பட்ட 10 நாள்களுக்குள் பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

2026-27 முதல் தொடங்கி மூன்று கல்வியாண்டுகளுக்கான முன்மொழியப்பட்ட கட்டணக் கட்டமைப்பின் விவரங்களை கட்டண ஒழுங்குமுறைக் குழு அமைத்த 14 நாட்களுக்குள் பள்ளி நிா்வாகங்கள் சமா்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்தக் குழு சட்டத்தின் விதிகளின்படி கட்டணங்களை நிா்ணயம் செய்யத் தொடரும் என்றும் அது கூறியது.