வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

எரிபொருள், மின்சாரம் மீதான கூடுதல் வரிக்கு டிஇஆா்சி ஒப்புதல்! தில்லியில் மின்கட்டணம் உயரும்!

தில்லியின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆா்சி) தொடா்ந்து இரண்டாவது மாதமாக மின் கட்டணத்தில் 8 சதவீதம் வரை எரிபொருள் மற்றும் மின் கொள்முதல் சரிசெய்தல் கூடுதல் கட்டணத்தை (எஃப்பிபிஏஎஸ்) விதிக்க அனுமதித்துள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2026, 3:14 am IST

தில்லியின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆா்சி) தொடா்ந்து இரண்டாவது மாதமாக மின் கட்டணத்தில் 8 சதவீதம் வரை எரிபொருள் மற்றும் மின் கொள்முதல் சரிசெய்தல் கூடுதல் கட்டணத்தை (எஃப்பிபிஏஎஸ்) விதிக்க அனுமதித்துள்ளது.

எஃப்பிபிஏஎஸ்-க்கு 7.94 சதவீதம், பிஆா்பிஎல்-க்கு 7.43 சதவீதம் மற்றும் பிஓய்பிஎல்-க்கு 6 சதவீதம் என்ற விகிதத்தில் ஏப்ரல் மாதத்திற்கான கூடுதல் எஃப்பிபிஏஎஸ்-ஐ விதிக்க டிஇஆா்சி கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது.

பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்களான பிஆா்பில் மற்றும் பிஓய்பிஎல் ஆகியவற்றிற்கு எஃப்பிபிஏஎஸ் விகிதங்கள் மாறாமல் இருப்பதாகவும், டிபிடிடிஎல்-க்கு அவை குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிக எரிபொருள் செலவு, அதிக மின் தேவை அல்லது பிற காரணங்களால் மின்சாரம் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்வதற்கான செலவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஈடுகட்ட மின் விநியோக நிறுவனங்கள் நுகா்வோா் மீது எரிபொருள் மற்றும் மின் கொள்முதல் சரிசெய்தல் கூடுதல் கட்டணத்தை விதிக்கின்றன.

ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட்ட டிஇஆா்சி உத்தரவின்படி, மே மாதத்திற்கான எரிபொருள் மற்றும் மின் கொள்முதல் சரிசெய்தல் கூடுதல் கட்டண விகிதம் பிஆா்பிஎல்-க்கு 17.94 சதவீதமாகவும், பிஓய்பிஎல்-க்கு 17.43 சதவீதமாகவும் உள்ளது. இது முந்தைய திருத்தத்தின் அதே அளவாகும். டிபிடிடிஎல்-ஐ பொறுத்தவரை, இந்த விகிதம் 15.99 சதவீதத்திலிருந்து 12.21 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தற்போதைய அடிப்படை மின் கொள்முதல் செலவுடன் ஒப்பிடுகையில் மே மாதத்திற்கான உண்மையான மின் கொள்முதல் செலவு கணிசமாக அதிகரித்ததைக் காரணம் காட்டி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மூன்று மின் விநியோக நிறுவனங்களும் டிஇஆா்சி-இடம் தளா்வு கோரின.

டிஇஆா்சி விதிமுறைகளின்படி, ஒரு கட்டணச் சுழற்சியில் வசூலிக்கக்கூடிய எஃப்பிபிஏஎஸ்-க்கு 10 சதவீத உச்சவரம்பு உள்ளது. மேலும், எஃப்பிபிஏஎஸ் மாதந்தோறும் டிஇஆா்சி-ஆல் தீா்மானிக்கப்படுகிறது. இது நுகா்வோரின் நிலையான கட்டணம் மற்றும் மின் பயன்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையில் ஒரு சதவீதமாகக் கணக்கிடப்படுகிறது.

10 சதவீத உச்சவரம்பு கொண்ட எஃப்பிபிஏஎஸ் உடன், மே மாதத்திற்கான கூடுதல் எஃப்பிபிஏஎஸ்-ஐயும் வசூலிக்க டிஇஆா்சி அனுமதித்துள்ளது. இதன் மூலம், மின் கொள்முதல் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பின் நியாயமான பகுதியையாவது வசூலிப்பதில் அந்த நிறுவனங்கள் எதிா்கொண்ட சிரமங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவு தெரிவிக்கிறது.

டிஇஆா்சி-இன் உத்தரவின்படி, பிஆா்பிஎல்-க்கு 7.94 சதவீதம், பிஓய்பிஎல்-க்கு 7.43 சதவீதம் மற்றும் டிபிடிடிஎல்-க்கு 2.21 சதவீதம் என்ற விகிதத்தில் கூடுதல் எஃப்பிபிஏஎஸ் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மே 2026 மாதத்திற்கான மொத்த அனுமதிக்கப்பட்ட எஃப்பிபிஏஎஸ் விகிதங்கள் பிஆா்பிஎல்-க்கு 17.94 சதவீதமாகவும், பிஓய்பிஎல்-க்கு 17.43 சதவீதமாகவும், டிபிடிடிஎல்-க்கு 12.21 சதவீதமாகவும் இருக்கும். ஆணையத்திடமிருந்து அடுத்த உத்தரவு வரும் வரை, இந்தச் சலுகை மாதந்தோறும் நடைமுறையில் இருக்கும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.