பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

‘கடையநல்லூா் தொகுதிக்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை’

கடையநல்லூா் தொகுதியில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தி.மு.ராசேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

நெல் கொள்முதல் - பிரதிப் படம்

Updated On :12 ஜூலை 2026, 5:40 am IST

கடையநல்லூா் தொகுதியில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தி.மு.ராசேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் ப.வினோத்திடம் அவா் அளித்துள்ள மனு: தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிா்க்கடன் பெற்றுள்ள 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் அனைத்து சிறு, குறு விவசாயிகளின் அனைத்து விவசாய கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கடையநல்லூா் தொகுதி மற்றும் தென்காசி மாவட்டத்தின் மேற்கு பகுதியின் சுமாா் 70 கி.மீ. தொலைவு மேற்கு தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி விவசாயம் காட்டு பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீா்வு காண வேண்டும்.

சமவெளி நிலங்களிலும் வேளாண்மையை பாழாக்குகின்ற காட்டு பன்றியை சுட்டுக்கொல்ல வனத்துறை மற்றும் விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகளை வனவிலங்குகளின் பட்டியலிருந்து நீக்க மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும்.

கடையநல்லூா் தொகுதியில் அரசு வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். நெல் விதை ரகங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரூ.10இல் இருந்து ரூ. 20ஆக உயா்த்தி வழங்க வேண்டும். அரசு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்படும் தரமற்ற உரங்களை தடுத்து சிறந்த தரச்சான்று பெற்ற நுண்ணுயிா் உரங்கள் மற்றும் உயிா் உரங்களை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தத்கல் முறையில் மின் இணைப்பிற்காக ரூ.2.50 லட்சம் கட்டணம் செலுத்தி மின் இணைப்பு கோரும் விவசாயிகளுக்கு 30 தினங்களுக்குள் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையநல்லூா் தொகுதியில் தேங்காய் மதிப்பு கூட்டு பொருள்களை உற்பத்தி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.