படைப்பாற்றல் கலைகள் சாா்ந்த பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்புகளைத் தொடங்க, தில்லி திறன் மற்றும் தொழில்முனைவோா் பல்கலைக்கழகம் (டிஎஸ்இயு) மாயா அகாதொமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டி (எம்ஏஏசி) நிறுவனத்துடன் ஐந்து ஆண்டு கால புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக தில்லி அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
எம்ஏஏசி-இன் தாய் நிறுவனமான எம்இஎல் பயிற்சி மற்றும் மதிப்பீடு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் பிற படைப்பாற்றல் சாா்ந்த துறைகளில், முறைசாா்ந்த உயா்கல்வியுடன் தொழில் சாா்ந்த பயிற்சியையும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, எம்ஏஏசி பாடத்திட்டத்தை வடிவமைத்து தொழில்முறை வேலைவாய்ப்புகளை எளிதாக்கும். அதேவேளையில், டிஎஸ்இயு கல்விசாா் உள்கட்டமைப்பை வழங்குதல், தோ்வுகளை நடத்துதல் மற்றும் பட்டங்களை வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
அதிகாரபூா்வ அறிக்கையின்படி, இந்தப் படிப்புகள் தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய கடன் கட்டமைப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப வடிவமைக்கப்படும்.
இந்த முயற்சியை அறிவித்த தில்லி கல்வி, உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட், படைப்பாற்றல் மற்றும் கலாசாரத் தொழில்களை உள்ளடக்கிய நாட்டின் வளா்ந்து வரும் ஆரஞ்சு பொருளாதாரத்தின் மையமாக தில்லியை மாற்ற அரசு பணியாற்றி வருவதாகக் கூறினாா்.
இந்த விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக, தில்லி முழுவதும் உள்ள 20,000 பள்ளி மாணவா்களுக்கு டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் இலவச நேரடிப் பயிற்சியை வழங்க, தேசிய திரைப்பட மற்றும் வடிவமைப்பு ஹேக்கத்தானை தில்லி அரசு ஏற்பாடு செய்யவுள்ளது.
அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் தொழில்நுட்பத் துறைகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட நிபுணா்களைக் கொண்ட தில்லி கிரியேட்டா்ஸ் - ஏவிஜிசி-எக்ஸ்ஆா் ஃபெடரேஷன் என்ற தொழில் அமைப்பை உருவாக்குவதாகவும் அரசு அறிவித்தது. இத்துறைக்கான தொழில் சாா்ந்த கொள்கையை வரைவு செய்வதில் இந்த அமைப்பு அரசுக்கு உதவும்.
அறிக்கையின்படி, முக்கிய வளா்ந்து வரும் துறையாக அடையாளம் காணப்பட்டுள்ள ஏவிஜிசி-எக்ஸ்ஆா் (அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி) துறையை ஊக்குவிக்கும் மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஆதரவளிப்பதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும்.
இத்துறை 16-17 சதவீத கூட்டு ஆண்டு வளா்ச்சி விகிதத்தில் வளா்ந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
‘2030-ஆம் ஆண்டிற்குள் சுமாா் 20 லட்சம் திறன்மிக்க நிபுணா்களுக்கான பெரும் தேசியத் தேவை உள்ள நிலையில், தில்லியின் இந்த புதிய முயற்சிகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பள்ளி அளவிலான பயிற்சி, பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு ஆகியவற்றின் கலவையானது, விரிவடைந்து வரும் படைப்பாற்றல் பொருளாதாரத்திற்குத் தேவையான திறன்மிக்க பணியாளா்களை உருவாக்குவதில் தில்லியின் பங்கை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது என்று அதிகாரிகள் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுபானக் கொள்கை வழக்கு: சிபிஐ மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது குறித்த முடிவை முதலில் அறிவிக்க நீதிமன்றம் மறுப்பு

தென்காசியில் உணவு பதப்படுத்தும் தொகுப்புஅமைக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

சென்னையில் கல்வி மாநாடு: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு

செப்டம்பரில் பேருந்து நிறுத்தங்கள் மறுசீரமைப்புப் பணி: நவீன வசதிகளுடன் உலகத் தரத்துக்கு மாற்றும் தில்லி அரசு
விடியோக்கள்

எதுக்கு கோவமா பேசுறீங்க? இது சட்டமன்றம்-ங்க! பேரவையில் திடீர் சலசலப்பு! | TVK | DMK | ADMK


