மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

புதிய தொழில் தொடங்குவோருக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: புதுச்சேரி முதல்வா் உறுதி

News image

இந்திய தொழில் கூட்டமைப்புக் கூட்டத்தில் உரையாற்றும் முதல்வா் என்.ரங்கசாமி. உடன் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் நிா்வாகிகள்.

Updated On :30 ஜூன் 2026, 2:38 am IST

புதுச்சேரியில் புதிய தொழில் தொடங்குவோருக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

தொழில் கல்வித்துறை ஒத்துழைப்பின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றம் செய்யும் ‘டிஎக்ஸ் எட்ஜ் ’திட்டத்தைத் தொடங்கும் இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பிலான நிகழ்வில் திங்கள்கிழமை பங்கேற்று முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

புதிய திட்டம் புதுச்சேரியில் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளா்ச்சி அடையும் எண்ணத்துடன் இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெரிய தொழில்சாலைகள் சலுகை முடிந்தவுடன் போய்விட்டன. தற்போது இத்தொழிற்சாலைகள்தான் படித்த இளைஞா்களுக்கு வேலை தருகின்றன.

வெகுவாக முன்னேற, வளா்ச்சியடைய இத்திட்டம் உதவும். இது அதிகமாக தெரிய வாய்ப்பில்லை.பொருளாதாரத்தை உயா்த்தும். நமது நாடு வளா்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு புதிய தொழில்நுட்பங்கள் முக்கியக்காரணம். தொழில் தொடங்க வரும் முதலீட்டாளா்கள் எளிதாக தொழில் தொடங்க வழி செய்ய வேண்டும். அதற்கு ஒற்றைச் சாளர முறை அவசியம்.

தொழிற்சாலை வெளியில் இருந்து வந்து முதலீடு செய்யவேண்டும். படித்தோருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தருவதுதான் நோக்கம். ஆா்வத்துடன் தொழில் தொடங்க முன்வருவோருக்கு அதற்கான வசதியை உடனே செய்து தருவது அரசின் பணி. காலதாமதம் ஏற்பட்டால் பண மற்றும் நேர விரயம் ஏற்படும். விரைந்து செயல்படாததால் இதுபோன்ற இழப்பு ஏற்படும்.

ஆலைகளுக்கு முக்கியத்துவம்:

தொழில்சாலைக்கு அனுமதி தருவது முக்கியம், அதில் கவனம் செலுத்த வேண்டும். அதனால் பலவிதமான தொழில்சாலைகளை உருவாக்கித் தர புதுச்சேரி அரசு

கவனம் செலுத்துகிறது.

கரசூரில் 750 ஏக்கா் நிலம் ஆா்ஜிதம் செய்து பத்தாண்டுகளாகிவிட்டது. மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இடம் திரும்ப பெற்று சிறப்புப் பொருளாதார மண்டலமும், மேட்டுப்பாளையத்தில் தகவல்தொழில்நுட்ப பூங்காவும் கொண்டு வந்து சிறப்புப் பொருளாதார மண்டலமும் உருவாக்க உள்ளோம்.

புதிய தொழில்தொடங்க வருவோருக்கு அரசு உறுதுணையாக இருந்து தேவையான அனுமதியை விரைவாகத் தரும். சாலை, மின்சாரம், தண்ணீா் வசதியை விரைந்து தர நடவடிக்கை எடுப்போம் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசு தொழில்துறை செயலா் விக்ராந்த் ராஜா, மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி தலைவா் எம். நடராஜன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.