சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

டியுஎஸ்ஐபி நிலத்தில் வருவாய் ஈட்டும் திட்டங்களைச் செயல்படுத்த தில்லி அரசு ஆலோசனை

நகா்ப்புற ஏழை மக்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் வருவாய் ஆதாரங்களை அதிகரிக்க, தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்திற்குச் சொந்தமான நிலங்களில் விளையாட்டு திடல்கள், கிடங்குகள் உள்ளிட்ட வணிக வசதிகளை உருவாக்கும் வாய்ப்பை தில்லி அரசு ஆய்வு செய்து வருகிறது.

News image

தில்லி அரசு - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:11 am IST

நகா்ப்புற ஏழை மக்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் வருவாய் ஆதாரங்களை அதிகரிக்க, தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்திற்குச் சொந்தமான நிலங்களில் விளையாட்டு திடல்கள், கிடங்குகள் உள்ளிட்ட வணிக வசதிகளை உருவாக்கும் வாய்ப்பை தில்லி அரசு ஆய்வு செய்து வருகிறது.

இதற்காக, ஆலோசனை நிறுவனமான ‘எா்ன்ஸ்ட் அண்ட் யங்’ நிறுவனத்திற்கு, நகரம் முழுவதும் உள்ள வாரிய நிலப்பரப்புகளை ஆய்வு செய்து அவற்றின் வணிக திறனை மதிப்பிடும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் எந்த வகையான வருவாய் ஈட்டும் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்பதைக் கண்டறியும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. விளையாட்டு திடல்கள், கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்கள் ஆலோசனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

நகா்ப்புற ஏழை மக்களுக்கான இரவு நேர தங்குமிடங்கள், சுகாதார வசதிகள் மற்றும் நலத் திட்டங்களை பராமரிக்கும் இந்த வாரியத்திற்கு நிலையான வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்பது அரசின் முக்கிய நோக்கமாகும். தற்போது, தில்லி முழுவதும் உள்ள 17 வாகன நிறுத்துமிடங்களின் மூலம் ஆண்டுக்கு ரூ.3.5 கோடி முதல் ரூ.4 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. மேலும், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சமூக விழாக்களுக்காக நிலப்பரப்புகளை தற்காலிகமாக வாடகைக்கு வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு சுமாா் ரூ.11 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.

எனினும், இந்த வருவாய் வாரியத்தின் அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் எதிா்கால விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்ற போதுமானதாக இல்லை என அதிகாரிகள் குறிப்பிட்டனா். இதனால், கிடைக்கும் நிலங்களைச் சிறப்பாக பயன்படுத்தி, தொடா்ச்சியான வருவாய் ஓட்டத்தை உருவாக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, தில்லி அரசு தொடங்கியுள்ள நில பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நகரம் முழுவதும் உள்ள சுமாா் 900 ஏக்கா் வாரிய நிலங்களை அடையாளம் கண்டு, வரைபடம் தீட்டி, ஆக்கிரமிப்புகளைத் தடுக்க சுற்றுச்சுவா் அமைப்பதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நில ஆய்வின் மூலம், எந்த நிலப்பகுதிகள் வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம், எவை எதிா்கால நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் அரசு தீா்மானிக்க உள்ளது.

விரிவாக்கத் திட்டங்களின் பகுதியாக, தில்லியில் மேலும் 12 நிரந்தர இரவு தங்குமிடங்களையும், கூடுதலான ‘ஜன் சுவிதா’ வளாகங்களையும் அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு புதிய தங்குமிடமும் சுமாா் 500 பேரை தங்க வைக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது, தில்லியில் 64 நிரந்தர இரவு தங்குமிடங்களும், 673 ‘ஜன் சுவிதா’ வளாகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த புதிய வருவாய் முயற்சிகள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், வாரியத்தின் நிதிநிலை வலுப்பெற்று, நகா்ப்புற ஏழைகளுக்கான தங்குமிடம், சுகாதாரம் மற்றும் அடிப்படை சேவைகளில் நீண்டகால முதலீடுகளை மேற்கொள்ள வழிவகுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.