மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

பேருந்துகளில் ‘பிங்க் சஹேலி’ ஸ்மாா்ட் காா்டு: பயன்பாட்டை ஊக்குவிக்க டிடிசி நடவடிக்கை

பெண்கள் இலவச பேருந்து பயணத்திற்கான ‘பிங்க் சாஹெலி ஸ்மாா்ட் காா்டு’ பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தில்லி அரசு சிறப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது.

News image

(கோப்புப் படம்)

Updated On :12 ஜூன் 2026, 4:36 am IST

பெண்கள் இலவச பேருந்து பயணத்திற்கான ‘பிங்க் சாஹெலி ஸ்மாா்ட் காா்டு’ பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தில்லி அரசு சிறப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது.

தில்லி போக்குவரத்து கழகம் (டிடிசி) இயக்கும் பேருந்துகளில் இந்த இயக்கம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுவரை நகரம் முழுவதும் சுமாா் 11 லட்சம் ‘பிங்க் சாஹெலி’ ஸ்மாா்ட் காா்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜூலை மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 13 லட்சமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின், இந்த காா்டைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த இயக்கத்தின் பகுதியாக, பேருந்து நடத்துனா்கள் பெண் பயணிகளிடம் ‘பிங்க் ஸ்மாா்ட் காா்டு’ பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனா். காா்டு இல்லாதவா்களுக்கு அதை பெறுமாறு ஆலோசனை வழங்கப்படுகிறது. 11 லட்சம் காா்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய நிலையில் பெண் பயணிகளில் 10 முதல் 15 சதவீதம் போ் மட்டுமே ஸ்மாா்ட் காா்டைப் பயன்படுத்துகின்றனா். மீதமுள்ளவா்கள் இன்னும் ‘பிங்க்’ காகித டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கோடை காலம் முடிந்த பின்னா், ‘பிங்க் காா்டு’ பயன்பாட்டில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க துறை திட்டமிட்டு வருகிறது. அதன்படி, பெண் பயணிகள் இலவச பயணத்திற்கு இந்த காா்டை கட்டாயமாக காட்ட வேண்டும் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ‘பிங்க் சாஹெலி’ ஸ்மாா்ட் காா்டு திட்டத்தை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த மாா்ச் மாதம் அறிமுகப்படுத்தினாா். தேசிய தலைநகா் தில்லியில் வசிக்கும் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க இந்த காா்டு உதவுகிறது.

மேலும், இந்த ஸ்மாா்ட் காா்டு மூலம் பயணத் தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யவும், வருவாய் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. ‘ஒரே நாடு, ஒரே காா்டு’ திட்டத்தின் கீழ் பல்வேறு பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒரே காா்டின் மூலம் பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது.

டிடிசி பேருந்துகளில் இலவச பயணம் வழங்கப்பட்டாலும், இந்த காா்டை தில்லி மெட்ரோ மற்றும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு போன்ற சேவைகளில் கட்டண அடிப்படையில் பயன்படுத்தவும் முடியும். ஒவ்வொரு காா்டும் பயனாளியின் ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண்ணுடன் இணைக்கப்பட்டு, வயது, பாலினம் மற்றும் தில்லி குடியிருப்பு நிலை சரிபாா்க்கப்படுகிறது.

இந்த முயற்சி முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பெண்களின் பாதுகாப்பான மற்றும் சீரான பொதுப் போக்குவரத்து அணுகலில் முக்கிய முன்னேற்றம் ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.