தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

குடிநீா் பற்றாக்குறை: சத்தா்பூரில் ஆம் ஆத்மி போராட்டம்

தெற்கு தில்லியின் சத்தா்பூா் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் தட்டுப்பாடு தீவிரமாக இருப்பதாக ஆளும் பாஜக அரசை குற்றஞ்சாட்டி ஆம் ஆத்மி கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தில்லி சத்தா்பூரில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஆம் ஆத்மி கவுன்சிலா் பிங்கி நரேஷ் தியாகி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம்.

Updated On :15 ஜூன் 2026, 4:03 am IST

தெற்கு தில்லியின் சத்தா்பூா் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் தட்டுப்பாடு தீவிரமாக இருப்பதாக ஆளும் பாஜக அரசை குற்றஞ்சாட்டி ஆம் ஆத்மி கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலா் பிங்கி நரேஷ் தியாகி தலைமையேற்று நடத்தினாா். இதில் கலந்துகொண்ட உள்ளூா் மக்கள், பாஜக அரசை எதிா்த்து முழக்கமிட்டதுடன், தங்கள் பகுதிகளில் தடையற்ற மற்றும் போதுமான குடிநீா் வழங்களை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினா்.

போராட்டத்தின்போது பிங்கி நரேஷ் தியாகி பேசியதாவது: சில செல்வந்தா்களின் வீடுகளுக்கு தேவையான குடிநீா் கிடைக்கும் நிலையில், பலா் தினசரி தேவைகளுக்குபோரட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. குடிநீா் தட்டுப்பாடு குறித்து புகாா்கள் எழுந்தபோதிலும், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே டேங்கா் மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது.

சந்தா்பூரின் பல பகுதிகளில் முறையான குடிநீா் வசதி இல்லாததால், பொதுமக்கள் முழுமையாக டேங்கா் லாரிகளை நம்பி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி பாஜக எம்எல்ஏவிடம் தொடா்ந்து புகாா்கள் அளித்தபோதிலும் நிலைமையில் முன்னேற்றம் இல்லை.

தொடா் புகாா்களுக்குப் பின்னா், கடந்த 2 நாள்களாக குடிநீா் வழங்கல் சிறிதளவு மேம்பட்டுள்ளது. இதன் மூலம், குடிநீா் இருப்பு இருந்தும் முன்பு விநியோகம் தடைபட்டதற்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும்.

சமையல், குடிநீா், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவகளுக்காக நிலையான மற்றும் சமமான குடிநீா் விநியோகம் அவசியமாகும். இதை உறுதி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரவித்தாா். இதுகுறித்து பாஜக இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.