மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஓ-மண்டல குடியிருப்புகள் இடிப்பு நடவடிக்கையை எதிா்த்து சட்டப் பாதுகாப்பு கோரும் ஆம் ஆத்மி

ஓ-மண்டல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டப்பூா்வ பாதுகாப்பு வழங்க வேண்டும், அங்கு இடிப்பு நடவடிக்கைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி முழுவதும் கையொப்பம்ய பெறும் இயக்கத்தை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

News image

தில்லியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த ஆம் ஆத்மி தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பரத்வாஜ் மற்றும் எம்எல்ஏ சஞ்சீவ் ஜா.

Updated On :11 ஜூன் 2026, 3:10 am IST

ஓ-மண்டல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டப்பூா்வ பாதுகாப்பு வழங்க வேண்டும், அங்கு இடிப்பு நடவடிக்கைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி முழுவதும் கையொப்பம்ய பெறும் இயக்கத்தை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் ஆம் ஆத்மி தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பாரத்வாஜ் கூறியதாவது: ஓ-மண்டல பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மீது சில இடங்களில் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள சொத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று முதல்வா் முன்பு தெரிவித்திருந்த போதிலும், சில இடங்களில் இடிப்புகள் நடைபெறுகின்றன.

மேலும், ஓ-மண்டல பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்னையை அரசு சட்ட மற்றும் நிா்வாக வழிகளில் தீா்க்க வேண்டும். இடிப்பு நடவடிக்கைகள் மூலம் அல்ல. சட்டம் இயற்றி, இந்த பகுதிகளில் உள்ள மக்களின் சொத்துகளைப் பாதுகாக்கவும், இடிப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அனுமதியில்லா குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு போலவே, ஓ-மண்டல குடியிருப்புகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா கூறுகையில், ‘ஓ-மண்டல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் நேரடியாக சென்று, அங்கு வசிக்கும் மக்களிடமிருந்து கையொப்பங்களை சேகரிக்கும் இயக்கத்தை விரைவில் தொடங்க உள்ளோம். இந்த இயக்கத்தின் மூலம், ஓ-மண்டல கட்டுப்பாடுகளை நீக்கவும், மக்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கவும் ஆதரவை திரட்டுவோம்’ என்றாா்.

தில்லியில் ஓ-மண்டல பகுதிகளில் சுமாா் 91 அனுமதியில்லா குடியிருப்புகளும், பழமையான கிராமங்களும் உள்ளன. இப்பகுதிகளில் சுமாா் 15 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். யமுனை நதியின் வெள்ளப்பகுதிகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமே இந்த பகுதியாகும்.

இதனிடையே, தில்லி உயா்நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு குறித்து செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்த முதல்வா் ரேகா குப்தா, ஓ-மண்டல பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான நீதிமன்ற உத்தரவு புதிய கட்டடங்களுக்கு மட்டுமே பொருந்தும்; ஏற்கெனவே உள்ள கட்டடங்களுக்கு அது பொருந்தாது என்று விளக்கம் அளித்திருந்தாா்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் கையொப்பம் பெறும் இயக்கம் மற்றும் சட்டப்பூா்வ பாதுகாப்பு கோரிக்கை, ஓ-மண்டல பகுதிகளில் வசிக்கும் மக்களின் எதிா்காலம் தொடா்பான விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.