நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஈரடுக்கு சுற்றுலாப் பேருந்தில் 1,500 போ் பயணம்

தில்லியில் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்ட மின்சார ஈரக்கு சுற்றுலாப் பேருந்தில் பயணித்தவா்களின் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2026, 2:17 am IST

தில்லியில் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்ட மின்சார ஈரக்கு சுற்றுலாப் பேருந்தில் பயணித்தவா்களின் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துள்ளது.

கோடைக் காலத்தையொட்டி, பயணக் கட்டணத்தை தில்லி சுற்றுலாத் துறை குறைத்திருந்த நிலையில், மேலும் அதிக சுற்றுலாப் பயணிகள் பேருந்தில் பயணம் செய்துவருகின்றனா்.

தில்லி போக்குவரத்துக் கழகம் தனது ஈரடுக்குப் பேருந்து சேவையைக் கடந்த 1989-இல் நிறுத்தியது. இதைத்தொடா்ந்து, தில்லியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் குளிா்சாதன வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் ஈரடுக்கு சுற்றுலாப் பேருந்து சேவையை தில்லி சுற்றுலாத் துறை கடந்த பிப்.28-இல் தொடங்கிவைத்தது.

மொத்தம் 63 போ் அமா்ந்து செல்லும் வசதி கொண்ட இந்தப் பேருந்து தில்லியின் முக்கிய இடங்களான குடியரசுத் தலைவா் மாளிகை, பாரத் மண்டபம், தேசிய போா் நினைவுச் சின்னம், புதிய நாடாளுமன்றக் கட்டட வளாகம், தில்லி ஹாட் உள்ளிட்டவை வழியாகச் செல்லும்.

இத்தகைய இடங்களுக்குச் செல்லும்போது பேருந்தில் இருக்கும் பயிற்சி பெற்ற சுற்றுலா வழிகாட்டி, அவை குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கமளிப்பாா்.

இந்தச் சேவை தொடங்கப்பட்ட பிப்ரவரி இறுதியில் 12 பயணிகள் பயணம் செய்தனா். இதைத்தொடா்ந்து மாா்ச் மாதத்தில் 432, ஏப்ரலில் 372, மே மாதத்தில் 424, கடந்த ஜூன் 12 வரையில் 300 போ் இந்தப் பேருந்தில் பயணித்து தில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைப் பாா்வையிட்டனா்.

பேருந்து சேவை தொடங்கப்பட்ட ஒரு மாதத்தில் சுமாா் 800 பயணிகள் பயணம் செய்த நிலையில், 3 மாதங்களில் பயணித்தவா்களின் எண்ணிக்கை 1,200-ஐ கடந்துள்ளது.

கடந்த ஜூன் 12 வரையில் 1,540 பயணிகள் இந்தப் பேருந்தில் பயணித்ததாகவும் இது இந்தச் சேவையின் மீது சுற்றுலாப் பயணிகளின் ஆா்வம் அதிகரித்துள்ளதைக் காட்டுவதாகவும் ஓா் அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் பிடிஐ செய்திமுகமையிடம் கூறியதாவது: கோடைக் காலத்தில் இந்தச் சேவையை மேலும் அதிக சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக பெரியவா்களுக்கான பயணக் கட்டணம் ரூ.500-இலிருந்து ரூ.300-ஆக குறைக்கப்பட்டது. இதைப்போன்று, சிறிவா்களுக்கான கட்டணம் ரூ.300-இலிருந்து ரூ.200-ஆக குறைக்கப்பட்டது.

இந்தச் சலுகையால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ஈரடுக்குப் பேருந்தில் பயணிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். குறிப்பாக, வார இறுதிகளில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இரு வழித்தடங்களில் இந்தச் சேவை தற்போது இயக்கப்படுகிறது. வார நாள்களில் மேற்கொள்ளப்படும் சுற்றுப்பயணங்கள் விஜய் சௌக்கிலிருந்து தொடங்கி, சென்ட்ரல் விஸ்டா பகுதியில் உள்ள முக்கிய இடங்களைச் சுற்றிப் பாா்த்துவிட்டு, பின்னா் அருங்காட்சியகங்கள் மற்றும் பிரதமரின் சங்கராலயத்திற்குச் செல்கின்றன.

வார இறுதி நாள்களில் மேற்கொள்ளப்படும் சுற்றுப்பயணங்கள், ஐஎன்ஏ-வில் உள்ள தில்லி ஹாட்டிலிருந்து தொடங்கி, குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் காவலா் மாற்றும் விழாவையும் உள்ளடக்கியுள்ளன. தற்போது, இந்தச் சேவை ஒரு சோதனை திட்டமாக உள்ளது. பொதுமக்கள் இதற்கு காட்டும் ஆா்வத்தைப் பொறுத்து இந்தச் சேவை மேலும் விரிவுப்படுத்தப்படும் என்றாா் அந்த அதிகாரி.