தில்லியை சுற்றுலா மற்றும் திரைப்பட படப்பிடிப்புக்கான மையமாக மாற்றும் வகையில் சுற்றுலா வாரியத்தை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதற்கான, சுற்றுலா வாரியம் மசோதா மாா்ச் 23-ஆம் தேதி தொடங்கும் தில்லி பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல்செய்யப்பட உள்ளது.
இந்த வாரியத்தின்கீழ், தில்லியை சுற்றுலா மற்றும் திரைப்பட படப்பிடிப்பு மையமாக மாற்ற பல்வேறு துறைகள் மற்றும் முகமைகள் இணைந்து பணியாற்றும்.
ஏற்கெனவே, தில்லிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது.
தில்லியை சா்வதேச திரைப்பட படப்பிடிப்பு மையாக மாற்றும் வகையில் படப்பிடிப்புக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு முகமைகளின் அனுமதியைப் பெற தயாரிப்பாளா்கள் தனித்தனியே விண்ணப்பிக்காமல், ஒற்றை சாளர முறையில் விண்ணப்பித்து அனுமதி பெற அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தில்லியை திரைப்பட படப்பிடிப்புக்கான நகரமாக மாற்ற புதிய திரைப்பட கொள்கையை தில்லி அரசு தயாரித்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா கடந்த ஆண்டு தெரிவித்தாா்.
உரிய நேரத்தில் பல்வேறு அரசு முகமைகளின் அனுமதியை பெற ஒற்றை சாளர முறை அமைக்கப்படும் என அவா் தெரிவித்திருந்தாா்.
தில்லியில் திரைப்படப் படப்பிடிப்பு சாா்ந்த பணிகளை மேற்கொள்ள தில்லி அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
முதலாவது தில்லி சா்வதேச திரைப்பட விழா மாா்ச் 25-ஆம் தேதி தொடங்குகிறது. திரைப்பட படப்பிடிப்புக்கான நகரமாக மாற்றும் வகையில் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

திருவள்ளூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்
சமூக மாற்ற அவலம்!

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!

திமுக தேர்தல் அறிக்கையின் 51 முக்கிய அம்சங்கள்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


