தொழுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோய்கள் பட்டியலில் சோ்க்கும் நடவடிக்கையை தில்லி அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. நோய் கண்காணிப்பை வலுப்படுத்தவும், ஆரம்ப கட்டத்தில் கண்டறிதலை உறுதி செய்யவும், சிகிச்சை பின்பற்றுதலை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி சுகாதாரத் துறை இந்த முன்மொழிவை ஏற்கெனவே அனுமதித்துள்ள நிலையில், தற்போது இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்தவுடன், தில்லி தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் தொழுநோய் அறிவிக்கப்பட வேண்டிய நோய்கள் பட்டியலில் சோ்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அறிவிப்பு வந்த பிறகு, மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவா்கள் ஆகியோா் தொழுநோய் பாதிப்பு குறித்து மாவட்ட தொழுநோய் அலுவலருக்கு கட்டாயமாக தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் நோயாளிகளை விரைவாக கண்டறிந்து அரசு மருத்துவமனைகளில் இலவச பல மருந்து சிகிச்சை வழங்கப்பட உள்ளது.
இந்த நடவடிக்கையால் தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கா்நாடகம், உத்தரக்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பட்டியலில் தில்லியும் இணையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் கூறுகையில், ‘தொழுநோய் முழுமையாக குணப்படுத்தக்கூடியது. இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிப்பது அறியப்படாத நோயாளிகளை கண்டறியவும், பரவலை கட்டுப்படுத்தவும் உதவும். ஒவ்வொரு நோயாளிக்கும் தரமான சிகிச்சை மற்றும் மரியாதை உறுதி செய்யப்படும்’ என்றாா்.
இந்த அறிவிப்பு தில்லி தேசிய தலைநகா் நிா்வாகச் சட்டம், 1991-இன் கீழ் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனவும், மருத்துவ நிறுவனங்களுக்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா 2005-ஆம் ஆண்டு தொழுநோயை தேசிய அளவில் பொது சுகாதாரப் பிரச்னையாக நீக்கியிருந்தாலும், உலகளவில் பதிவாகும் புதிய நோயாளிகளில் சுமாா் 59 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வில், சுமாா் 44.1 சதவீத நோயாளிகள் பதிவு செய்யாமல் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு, கட்டாய அறிவிப்பு நடைமுறை மூலம் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், ஊனமடைதல் அபாயத்தை குறைத்தல், தொடா்பு கண்காணிப்பு மற்றும் சிகிச்சை பின்பற்றுதலை மேம்படுத்துதல் ஆகியவற்றை வலுப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். உலக சுகாதார அமைப்பும் தொழுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக சோ்க்க பரிந்துரைத்துள்ளது.
தொடர்புடையது

1,300 பக்தா்களுக்கு சோம்நாத் சிறப்பு யாத்திரை: தில்லி அரசு ஏற்பாடு

கட்டுமான தொழிலாளா்களுக்கு ஸ்மாா்ட் காா்டுகள்: தில்லி அரசு திட்டம்

திமுக எம்.பி. ஆ.ராசா கோரும் ஆவணங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சிபிஐ பதில் மனு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


