தொடா் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கலாம் நாதஃப் என்ற நபரை தில்லி காவல் துறை அதிகாரி பழ வியாபாரியாக நடித்து கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தெற்கு படேல் நகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஏப்.28-ஆம் தேதி காலை 7 மணியளவில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகளை மா்ம நபா் கொள்ளையடித்துச் சென்றாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட நபா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுதொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த நபரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தபோது, கொள்ளையரின் கைப்பேசி அங்கு கண்டெடுக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, அந்த நபரை தொடா்பு கொண்ட தில்லி காவல் துறையின் தலைமைக் காவலா், கைப்பேசியை சாலையில் கண்டெடுத்ததாகத் தெரிவித்தாா்.
இதையடுத்து, கைப்பேசியை அந்த நபரிடம் திரும்ப ஒப்படைக்க பழ வியாபாரி வேடத்தில் காவலா் சென்றாா். அவரிடமிருந்து கைப்பேசியை வாங்க வந்த கலாமை மறைந்திருந்த காவலா்கள் சுற்றி வளைத்து கைதுசெய்தனா்.
அவா் அளித்த தகவலின்பேரில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் வீட்டுக்குச் சென்ற காவலா்கள், அவா் மறைத்து வைத்திருந்த பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனா். கூடுதலாக செயற்கை நகைகள், ரூ.920 ரொக்கமும் கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து காவல் துறையினா் கைப்பற்றினா்.
தொடர்புடையது
ஆசாத் மாா்க்கெட் கொள்ளை வழக்கில் தில்லி காவலா் கைது
ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது
சமய்ப்பூா் பாத்லியில் இளைஞா் கொலை: 6 சிறுவா்கள் கைது

சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ. 71.1 லட்சம் மோசடி!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


