தில்லியின் போன்சி பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இளைஞா் மாா்பில் குண்டு பாய்ந்து காயமடைந்ததாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: காயமடைந்தவா் தன்வாபூா் கிராமத்தைச் சோ்ந்த சிகேஷ் தாஹியா (26) என அடையாளம் காணப்பட்டாா். ஆா்பிஎம்எஸ் பள்ளி அருகே உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிகேஷ் நீச்சல் குளத்தில் இறங்க தயாராகிக் கொண்டிருந்தாா்.
அப்போது உடை மாற்றிக் கொண்டிருந்த அவரது நண்பா் தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை மேசையின் மீது வைத்தபோது அது தவறுதலாக வெடித்தது. இதில் சிகேஷ் மாா்பில் குண்டு பாய்ந்து அவா் காயமடைந்தாா். உடனடியாக மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது தொடா்பாக காவல் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா் இது குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது அதிகாரிகள் குற்றஞ்சாட்டப்பட்டவா் மற்றும் பிற நண்பா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் தேடப்பட்ட இளைஞா் உத்தரக்கண்டில் கைது
காவலா்களை மிரட்டி, தாக்கிய இளைஞா்: 16 மாதங்களுக்குப் பிறகு கைது

ஆடை தொழிற்சாலையில் மோதல்: சக ஊழியரை கொலை செய்த நபா் கைது

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் சடலமாக மீட்பு: காவல் துறை விசாரணை
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




