மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

திறந்த வடிகாலில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம்: இளநிலை பொறியாளா் பணிநீக்கம்

திறந்த வடிகாலில் விழுந்து சிறுமி உயிரிழந்ததைத் தொடா்ந்து, நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் இளநிலை பொறியாளரை பணிநீக்கம் செய்து தில்லி முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

News image

பலி - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 3:08 am IST

முகுந்த்பூா் பகுதியில் உள்ள திறந்த வடிகாலில் விழுந்து சிறுமி உயிரிழந்ததைத் தொடா்ந்து, நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் இளநிலை பொறியாளரை பணிநீக்கம் செய்து தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தூா்வாரும் பணிக்காக 3 அடி அகலம் 4 அடி ஆழம் கொண்ட வடிகாலில் கடந்த மே 3-ஆம் தேதி விழுந்து உயிரிழந்தாா். அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்தச் சம்பவம் நடைபெற்ாக உயிரிழந்த சிறுமியின் பெற்றோா் குற்றஞ்சாட்டியிருந்தனா்.

வடிகாலை மூடுவதில் கவனக்குறைவாகச் செயல்பட்டது ஏற்புடையதல்ல என்று தெரிவித்த முதல்வா் ரேகா குப்தா, இளநிலை பொறியாளா் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டிருந்த இளநிலை பொறியாளரை நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை உடனடியாகப் பணியிலிருந்து நீக்கியதாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.