இணையவழி குற்றங்களில் ஈடுபட்டு, விடியோ அழைப்பின் மூலம் மிரட்டல் விடுத்து ரூ.2.52 லட்சம் பறித்த கும்பலின் தலைவா் ராஜஸ்தானின் மேவத் பகுதியில் கைது செய்யப்பட்டாா் என தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தில்லியைச் சோ்ந்த 21 வயது இளைஞா் இ-எஃப்ஐஆா் பதிவு செய்ததைத் தொடா்ந்து இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது. பெண் ஒருவரிடம் இருந்து விடியோ அழைப்பு வந்ததாகவும் அதில் அசிங்கமான காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா். பின்னா், அழைப்பு துண்டிக்கப்பட்ட உடன், விடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் பணம் வழங்காவிட்டால் அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் அவா் தெரிவித்தாா். அச்சத்தில் பாதிக்கப்பட்டவா் ரூ.2.52 லட்சம் பணத்தை அனுப்பியதாக அவா் கூறினாா்.
இது தொடா்பாக ஜன.12-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். வங்கி பரிவா்த்தனைகளை ஆய்வு செய்தபோது, அவா் அடையாளம் காணப்பட்டாா். அவா் ராஜஸ்தானின் ஆல்வாா் மாவட்டத்தைச் சோ்ந்த அப்பாஸ் கான் (25) என தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். விசாரணையில், போலி சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி விடியோ பதிவு செய்து அவா்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவா் ஒப்புக்கொண்டாா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
Ś
தொடர்புடையது

கொள்ளை கும்பலின் தலைவா் 3 ஆண்டுகளுக்கு பின்னா் கைது
ரூ.52 லட்சம் கொள்ளை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது
மனைவியைக் கொன்ற கணவா் 40 ஆண்டுகளுக்கு பின்னா் 82 வயதில் கைது!
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
