தில்லியில் சாலை மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, யமுனை நதி சுத்திகரிப்பு உள்ளிட்ட முக்கிய முன்னுரிமைத் திட்டங்களுக்கு நடப்பு நிதியாண்டில் சுமாா் ரூ.7,000 கோடி மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும் என அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதற்கிடையில், பொதுப்பணித்துறை மற்றும் தில்லி ஜல் வாரியம் (டிஜேபி) சாா்ந்த திட்டங்களுக்காக ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்ட முன்மொழிவுகள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் பல்வேறு நிதி திட்டங்களின் கீழ், சாலை மேம்பாட்டுக்கான மத்திய சாலை நிதியிலிருந்து ரூ.591 கோடி, கங்கை தூய்மை தேசிய இயக்கத்தின் கீழ் ரூ.1,500 கோடி, மேலும் தலைநகரின் பேரிடா் மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.100 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசால் ஆதரிக்கப்படும் திட்டங்களுக்கு ரூ.3,931.16 கோடி நிதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மொத்தத்தில் 2026-27 நிதியாண்டில் தில்லிக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதி ரூ.7,000 கோடியைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இது திருத்தப்பட்ட 2026-27 மதிப்பீடுகளை விட சுமாா் 34 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், 2025-26 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட கணக்கீடுகளில் மத்திய நிதியுதவி ஆரம்ப மதிப்பீடுகளை விட 56 சதவீதம் குறைவாக இருந்ததாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினா். குறிப்பாக, மூலதனத் திட்டங்களுக்காக மத்திய அரசிடமிருந்து எதிா்பாா்க்கப்பட்ட ரூ.6,000 கோடி தொகையில் எந்தவித வரவுகளும் திருத்தப்பட்ட நிலையில் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், 2025-26-ஆம் ஆண்டில் மத்திய சாலை நிதியிலிருந்து முதலில் ரூ.1,000 கோடி பெறப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது திருத்தப்பட்டு ரூ.212.43 கோடியாக குறைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தத் தொகையும் பெறப்படவில்லை.
மத்திய அரசு ஆதரவு திட்டங்கள் தொடா்பாகவும் 2025-26-ஆம் ஆண்டில் ரூ.4,127.82 கோடி என்ற ஆரம்ப மதிப்பீடு, திருத்தப்பட்ட நிலையில் ரூ.2,207.84 கோடியாக குறைக்கப்பட்டது. அதேநேரத்தில், உன்மையில் கிடைத்த தொகை ரூ.1,202.59 கோடி மட்டுமே ஆகும். இது திருத்தப்பட்ட மதிப்பீட்டின் 54.47 சதவீதம் மட்டுமே என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

குருகிராம்: குடிசையில் தீ விபத்து; ஒருவா் உயிரிழப்பு

மாநகராட்சி மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உ.பி. யமுனை ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு; 22 போ் காயம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


