அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

உ.பி. யமுனை ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு; 22 போ் காயம்

உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனம் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயரிழந்தனா். மேலும் பலா் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவன் அருகே யமுனை ஆற்றில் வெள்ளிக்கிழமை படகு விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா். ~உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் யமுனை ஆற்றில் படகு விபத்தைத் தொடா்ந்து மீட்கப்ப

Updated On :10 ஏப்ரல் 2026, 11:52 pm IST

மதுரா, ஏப்.10: உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனம் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா். மேலும் 5 காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘யமுனை ஆற்றில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த படகு, கேசி படித்துறை அருகே சென்றபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த மிதவைப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆற்றில் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, மிதவைப் பாலம் பெருமளவில் அண்மையில் அகற்றப்பட்டது. சிறிய பகுதி மட்டும் எஞ்சியிருந்த நிலையில், அதன் மீது படகு மோதி கவுழ்ந்துள்ளது’ என்றனா்.

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவா்களில் 10 போ் உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா். 5 பேரைக் காணவில்லை. இவா்கள் அனைவரும் பஞ்சாபிலிருந்து சுற்றுலா வந்தவா்கள்’ என்று மாவட்ட நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Story image

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குப் பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் இரங்கல் தெரிவித்தாா். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு அளிக்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.