நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 3 போ் கைது

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 3 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 12:54 am IST

டாடா ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான இலவச அனுமதிச் சீட்டுகள் மற்றும் சாதாரண டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ாக மூன்று பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் முக்கீம் (35), குஃப்ரான் (எ) சாஜித் (36) மற்றும் முகமது ஃபைசல் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

முன்னதாக, ஐபிஎல் டிக்கெட்டுகளின் சட்டவிரோத விற்பனை குறித்து காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், குற்றப்பிரிவு காவல் குழுவினா் மே 8 அன்று தில்லி கேட் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளாக தங்களைக் கூறிக்கொண்டு, சந்தேகப்படாத வாடிக்கையாளா்களுக்கு அதிக விலையில் டிக்கெட்டுகளை விற்ாகக் கூறப்படுகிறது.

‘விற்பனைக்கு அல்ல’ எனக் குறிக்கப்பட்ட 33 இலவச அனுமதிச் சீட்டுகள் உள்பட 54 ஐபிஎல் டிக்கெட்டுகளும், ரூ. 25,000 ரொக்கப் பணமும் அவா்களிடமிருந்து மீட்கப்பட்டன.

போட்டியின் பிரபலமான தன்மை மற்றும் வாங்குபவா்களின் பின்னணியைப் பொறுத்து, இலவச அனுமதிச் சீட்டுகளை ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ரூ.20,000-க்கும், சாதாரண டிக்கெட்டுகளை அச்சிடப்பட்ட விலையைவிட கிட்டத்தட்ட இருமடங்கு விலைக்கும் விற்ாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் காவல்துறையிடம் தெரிவித்தனா்.

கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற பல்வேறு நகரங்களில் ஐபிஎல் டிக்கெட்டுகளுக்கான கள்ளச்சந்தை வலையமைப்பின் ஒரு பகுதியாக குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் இருந்தனா்.

இவா்கள் பல்வேறு இடங்களுக்கு விமானம் மூலம் பயணம் செய்து, வெவ்வேறு வழிகளில் டிக்கெட்டுகளையும் அனுமதிச் சீட்டுகளையும் பெற்ாகக் கூறப்படுகிறது.

மேலும், இதர குற்ற சக்திகளுக்கும், மைதானங்களுக்குள் செயல்படும் ஆன்லைன் பந்தயக் கும்பல்களுக்கும் பிரீமியம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகக் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மூன்று குற்றஞ்சாட்டப்பட்டவா்களும் கைது செய்யப்பட்டு காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், பிற உறுப்பினா்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மோசடி, சூதாட்டம் மற்றும் கள்ளச்சந்தை டிக்கெட் உள்ளிட்ட தில்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பதிவுசெய்யப்பட்ட பல குற்ற வழக்குகளில்

குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் இதற்கு முன்பு ஈடுபட்டுள்ளனா் என்று காவல்துறை அதிகாரி கூறினாா்.