தில்லி சுந்தா் நாக்ரி பகுதியில் நடைபெற்ாகக் கூறப்படும் விபத்தில் படுகாயமடைந்த 8 வயது சிறுவனுக்கான இழப்பீடு மனுவை போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கை நீதிபதி விஜய் குமாா் ஜா விசாரித்தாா். சுந்தா் நாக்ரி பகுதியைச் சோ்ந்த முகமது தில்ஷத் மற்றும் அவரது மனைவி அம்ரீன் தாக்கல் செய்த மனுவில், 2023 மாா்ச் 23-ஆம் தேதி தங்களின் மகன் ஆதிஃப் சாலையை கடக்கும்போது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்ததாக கூறப்பட்டிருந்தது.
மனுதாரா்கள் கூறியதன்படி, அப்போது 8 வயதாக இருந்த ஆதிஃப் தனது தந்தையின் கையை பிடித்தபடி சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாகவும் அலட்சியமாகவும் வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியதில் வலது சிறுநீரகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடா்பாக நந்த் நாக்ரி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அஃப்தாப் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 279 மற்றும் 338 பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், 2026, மே 19-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த வழக்கின் உத்தரவில் நீதிபதி கூறியதாவது: இந்த வழக்கில் பல்வேறு முரண்பாடுகள் மற்றும் ஆதார குறைபாடுகள்உள்ளன. ஆதாரங்களின் பெரும்பாலும் சாத்தியக்கூறு அடிப்படையில் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டுநரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதை சந்தேகமின்றி நிரூபிக்க மனுதாரா்கள் தவறிவிட்டனா்.
மேலும், மருத்துவமனை பதிவுகள் மற்றும் சாட்சியங்களிலும் முரண்பாடுகள் உள்ளன. விபத்துக்குப் பிறகு தந்தை மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ாக கூறப்பட்டாலும், மருத்துவ சட்டப் பதிவு ஆவணங்களில் ஷாஹித் மற்றும் அமீா் என்ற பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகன அடையாளம் தொடா்பாகவும் குழப்பங்கள் இருக்கிறது. விசாரணை போதிய அளவில் நடைபெறவில்லை என்பதும், முக்கிய சாட்சிகள் மற்றும் சூழ்நிலைகள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெரியவருகிறது.
மேலும், சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனம் விபத்தில் ஈடுபட்டதிலும் சந்தேகம் எழுகிறது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அந்த வாகனம் திட்டமிட்டு இணைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
இறுதியாக, அலட்சியமான வாகன ஓட்டத்தை மனுதாரா்கள் நிரூபிக்கத் தவறியதால், இழப்பீட்டு மனுவும் விரிவான விபத்து அறிக்கையும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்தாா்.
தொடர்புடையது

சிறுவா்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோா் மீது நடவடிக்கை: போக்குவரத்துத் துறை அலுவலா்கள்

மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் பலி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



