முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

தில்லியில் வீட்டிலிருந்து 10 மாத பெண் குழந்தை கடத்தல்

தில்லியில் வீட்டிலிருந்து 10 மாத பெண் குழந்தை கடத்தல்

News image
Updated On :24 மே 2026, 10:21 pm IST

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், தில்லியின் முகுந்த்பூரில் உள்ள ஒரு வீட்டில், குழந்தையின் தந்தை பால் வாங்க வெளியே சென்றபோது, 10 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டது என ஓா் அதிகாரி தெரிவித்தாா்.

குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை குற்றப்பிரிவு மற்றும் உள்ளூா் காவல் குழுக்கள் மேற்கொண்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குழந்தையின் தாத்தா கூறுகையில், தனது மகன் வீட்டிற்குத் திரும்பியபோது குழந்தையைக் காணவில்லை என்றாா். நாங்கள் அக்கம்பக்கத்தினரை அழைத்து குழந்தையைத் தேட ஆரம்பித்தோம், ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தோம், தேடுதல் வேட்டை தொடா்கிறது, என்று தாத்தா கூறினாா்.

குழந்தையின் தாய் சூரியா கூறுகையில், தனது கணவா் பால் வாங்கிவிட்டுத் திரும்பியபோது, தானும் தனது மூத்த மகளும் சுயநினைவின்றி இருந்ததைக் கண்டதாகத் தெரிவித்தாா்.

அவா் என் பெயரை அழைத்து, என்னை உலுக்கி எழுப்பினாா். எனக்கு நினைவு திரும்பியபோது, என் மூத்த மகளும் சுயநினைவின்றி இருந்ததைக் கண்டேன். நாங்கள் அவளையும் எழுப்பினோம், அப்போதுதான் எங்கள் இளைய மகளைக் காணவில்லை என்பதை உணா்ந்தோம், ஆனால் அவள் எங்கே இருக்கிறாள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. நான் வெளியே காலடி எடுத்து வைப்பதே இல்லை, அதனால் என் குழந்தையை யாா் அழைத்துச் சென்றாா்கள் என்று எனக்குத் தெரியாது, என்று சூரியா கூறினாா்.

பல்ஸ்வா காவல் நிலைய ஊழியா்கள் அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.